பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

பல்லவர் வரலாறு



கேட்டபடியே இருந்தது என்பதும், அம் மறையவர் அனைவரும் பண்பட்ட அறிவுடையோர் என்பதும் தேவாரப் பாடல்களால் நன்கறியும் செய்திகளாம்.

ஊராண்மை

இவர்கள் ஆட்சியில் ‘ஊர் அவைகள்’ பல இருந்தன. அவை ஊருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வந்தன; வழக்குகளை விசாரித்துமுடிவு கூறின. இதனைத்தடுத்தாட்கொண்டபுராணத்தும் திருநீலகண்ட நாயனார் புராணத்தும் சண்டீசர் புராணத்தும் காணலாம். பெரிய புராணத்துள், 20க்கு மேற்பட்ட ஊர்கள் குறிக்கப்பட்டுள. அவற்றுள் சேந்தன் அளித்த சேய்ஞலூர், திருமணஞ்சேரி, தெளிச்சேரி, திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருநின்றவூர் முதலியன குறிப்பிடத்தக்கன. பல்லவ அரசர் அளித்த சிற்றுர்கள் மிகப் பல ஆகும். சான்றாக, இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டிற்கும் அருகில் இரண்டு சேரிகளை உண்டாக்கினான். அவையே பட்டயத்தாள் மங்கல அக்கிரகாரம், தயாமுகமங்கல அக்கிரகாரம் என்பன.

படைக்கலப் பயிற்சி

இங்ஙனம் கல்வி கற்பித்தும் ஊராண்மை செய்தும் வந்த நான்மறையாளர், தம் சேரிகளைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பதற்கென்று படைக்கலப் பயிற்சியும் பெற்றிருந்தனர். இத்தகைய பயிற்சியாற்றான் பிராமணர் பலர் மேலைச் சாளுக்கியரிடம் மகா சாமந்தராக இருந்தனர் என்பது இங்கு அறியத்தகும். பல்லவர் ஆட்சியில் இத்தகையோர் இருந்தமைக்குரிய சான்றுகள் இல்லை; ஆயினும், மயூரசன்மனைக் குறிக்கலாம்.

வேலைகள்

இம் மறையவர் வடமொழியுடன் இந்நாட்டு மொழியான தமிழையும் கற்றிருந்தனர்; கோவிற் பூசைசெய்தனர்; கோவில்களின்