பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

299



இருந்தன. எனவே, தேவார காலத்திற்கு முன்பே சில கோவில்கள் புதுப்பிக்கப் பட்டன என்பது தெளிவாகிறதன்றோ? தெளிவாகவே, அவை கட்டப்பட்ட காலம் மிகப் பண்டையதே என்பது வெளியாகிறதன்றோ? தேவார காலத்தில் விமானம் கொண்ட கோவில்கள் இருந்தன என்பது பெண்ணாகடம்-துங்கானை மாடம் கோவில் அமைப்பைக்கொண்டு நன்குணரலாம். விமானம் ‘தூங்கும் யானை வடிவில்’ அமைந்ததாகும். திரு இன்னம்பர். திருத்தணிகைக் கோவில் விமானங்கள் இம்முறையில் அமைந்தவை. திரு அதிகைக் கோவில், திருக்கடம்பூர் இவற்றின் உள்ளறைகள் தேர் போன்ற அமைப்புடையவை: உருளைகள் குதிரைகள் பூட்டப்பெற்றவை. திருச் சாய்க்காட்டுக்கோவிலை ஒட்டித் தேர்போன்றவிமானம் ஒன்று உருளைகளுடன் இருக்கின்றது.[1]

பழைய கோவில்கள்

இந்த விமான அமைப்புடைய தேர் போன்ற கோவில்களே பழையவை. இன்று காணப்படும் கோவில்களை பழையவை. இன்று காணப்படும் கோவில்களை அடுத்துள்ள தேர்கள் மிகப்பழைய காலத்தில் மரக்கோவில்களாக இருந்தவை. மனிதன் மரக் கோவிலைப் போலச் செங்கற்கள் கொண்டு பிற்காலத்தில் கோவில்கள் அமைத்தான் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். சான்றாக நகரில் உள்ள சில கோவில்களைக் காணலாம்.அவை கி.மு. 250இல் ஆக்கப்பட்டவை. அவற்றைச் சுற்றிக் கற்சுவர்கள் இருக்கின்றன. ஆயின், கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டவையே ஆகும்.[2]

முதல்-இடைக் காலக் கோவில்கள் (கி.பி. 250-600)

அப்பர் காலத்தில் புகாரில் இருந்த கோவில் பல்லவன் ஈச்சரம் எனப் பெயர் பெற்று இருந்தது. அக் கோவில் ‘பல்லவன்’ கட்டிய கோவில் அல்லது ‘பல்லவன் பூசித்த கோவில்’ ஆக இருத்தல்

  1. “Sivasthala Manjari, pp.50, 91, 135.
  2. O.C.Gangooly’s “Indian Architecture’, p.13.