பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

323



(4) தெரிவை, ‘ஆராவமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்.’

(5) இந் நூலால் பெண்கள் சிவபெருமானை எண்ணி வெண்பாக்கள் பாடுதல் மரபு என்பது தெரிகிறது.[1]

(6) இந்நூலில், இல்லாரை எல்லாரும் என்ற குறளும் கண்டு கேட்டு என்ற குறளும் முழுவதும் வைத்து ஆளப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின், இது படித்து இன்புறத்தக்க சிறந்த நூல் என மற்றொரு முறை கூறலாம்.

நாலாயிரப் பிரபந்தம் (கி.பி. 200-900)

முதல்வர் ஆழ்வார் மூவரும் திருமழிசையாழ்வாரும் பல்லவர்க்கு. முற்பட்டவர் ஆவர். நாம் அறிந்தவரை பல்லவர் காலத்தில் தொண்டை நாட்டில் இருந்த திருமங்கை ஆழ்வாரும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாருமே ஆவர்.[2] இவர்கள் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் இருந்தவர்கள். இவர்கள் பாடல்களைக் கொண்ட இப் பிரபந்தம்பற்றி முன்னரே நன்கு விளக்கப்பட்டுள்ளது. பல்லவர்கால மணிப்பிரவாள நடைக்கு இந்நூல் ஏற்ற சான்றாகும்.

பல்லவர் அவைப் புலவர் (கி.பி. 615-900)[3]

பிற்காலப் பல்லவர் காலத்திற்றான் தமிழ்மொழியிற் கல்வெட்டுகளும்.செப்பேடுகளும் வெளிவந்தன. அவற்றில் உள்ள அழகிய தமிழ்ப் பெயர்கள், அழகிய தொடர்கள், வருணனை இன்ன பிறவும் பண்பட்ட புலவர் பெருமக்களால் முதலில் வரையப் பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.தமிழ்நாட்டில் தமிழ்


  1. வெண்பா மிகுதிப்பட்டது பல்லவர் காலமே என்பதற்கு இஃது மொரு சான்றாகும்.
  2. வேண்டுமாயின் திருமழிசை ஆழ்வாரை ஏறத்தாழ முற்காலப் பல்லவர் காலத்தவர் (கி.பி. 250-350) எனக் கொள்ளலாம்.
  3. தளவானூர் கல்வெட்டு வெண்பா மகேந்திரன் காலத்தது; இவன் காலமுதலே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஆதலின் இவன். காலமே தொடக்க காலமாகக் கொள்ளப்பட்டது.