பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பல்லவர் வரலாறு



பலவகைப் போர்கள்

இந்தக் குழப்பமான இடைக்காலத்தில் (கி.பி. 340-575) நடந்த போர்கள் பல போரிட்ட அரசுகள் பல. இவை ஏறத்தாழக் காலமுறைப் படுத்தி விளகமாக இங்கு (முதன் முறையாக)த் தரப்படுகின்றன.

சமுத்திர குப்தன் படையெடுப்புக்கு ஆளானவருள், காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன். அவன் குப்தனிடம் போரிட்டுத் தோற்றான் என்பதில் ஐயமில்லை. அந்த அமயத்திற்றான் பல்லவனுடன் போரிட்டு மயூரசன்மன் குந்தன அரசை ஏற்படுத்தினான்.[1]

வரகாடகர் போர்

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) வெளியிட்ட வேலூர் பாளையப் பட்டயத்தில், கந்த சிஷ்யன் இருபிறப்பாளர் தம் கடிகாவை (கல்லூரியைச்) சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான்’ என்னும் செய்தி காணப்படுகிறது. அதே பட்டயத்தில் மேற்சொன்னதை அடுத்தே, ‘அவனுக்குப்பின் வந்த குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத்தில் பல்லவரோடு மாறுபட்ட சுற்றுப்புற அரசருள் ‘சத்தியசேனன்’ என்ற பெயருடன் எவனும் இருந்ததில்லை. இதைச் சொன்ன வேலூர் பாளையப் பட்டயமே பின்னர்ச் சோழர் படைகளைப் பெயரிட்டுக் குறிக்கிறது அங்ஙனம் சோழரை அறிந்திருந்த பிற்காலப் பல்லவர் (பட்டயம் வெளியிட்டவர்) சத்தியசேனன் இன்னவன் எனக் கூறாததையும், குமாரவிஷ்ணு காஞ்சியை இன்னவர் கையிலிருந்து மீட்டான். என்பதைத் தெளிவாகக் கூறாமையையும் நோக்க, இச் சத்தியசேனன் என்பவன் ‘முற்றும் புதியவன்-வெளிநாட்டான்’ எனக் கோடலில் தவறில்லை. அங்ஙனமாயின், இவன் யாவன்?

வரகாடகர் படையெடுப்பு(?)

சமுத்திரகுப்தன் படையெடுப்பால் வலியிழந்த ஆந்திர நாட்டு அரசரை வென்று, வாகாடர் என்ற அரசு மரபினர் ஆந்திரப்


  1. Ibid, pp.16,17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/82&oldid=583607" இலிருந்து மீள்விக்கப்பட்டது