பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக்காலப் பல்லவர்

73


போர்
எண்
ஏறத்தாழப்
போர் நடந்த காலம்
கி.பி.
போரிட்ட பல்லவர் போரிட்ட
இருதிறந்தார்
6 436-460 குமார விஷ்ணு 2 பல்லவர் - வாகாடகர் போர் 3
7 460-475 கந்தவர்மன் 3 பல்லவர் - கதம்பர் போர் 3
8 460-475 புத்தவர்மன் பல்லவர் - சோழர் போர்
9 475-480 சிம்மவர்மன் 2 பல்லவர் - கதம்பர் போர் 4
10 500-525 விஷ்ணுகோபவர்மன் பல்லவர் - கதம்பர் போர் 5
11 525-550 நந்திவர்மன் 1 பல்லவர் - சாளுக்கியர் போர் 1
12 550-575 சிம்மவர்மன் 3 பல்லவர் - சாளுக்கியர் போர் 2

இங்ஙனம், வடமொழிப் பட்டயங்களை வெளியிட்ட இடைக்காலப் பல்லவருட்பலர், ஏறத்தாழத்தமதுகாலம் முழுவதுமே (கி.பி. 340-575) குப்தர், வாகாடகர், கதம்பர், சாளுக்கியர், சோழர் என்பவரோடு ஓய்வின்றிப் போர் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாலும், அடிக்கடி தமது பேரரசின் சில பகுதிகள் பகைவர் கைப்பட்டமையாலும், தமது தலைநகரமே கைமாறியதாலும், தம் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் காஞ்சியிலிருந்து விடுத்திலர் என்பது நன்கு அறியத்தக்கது. “நெல்லூர், குண்டுர்களை ஆண்ட இடைக்காலப் பல்லவர் (1) வீரகூர்ச்சவர்மன் (2) இரண்டாம் குமாரவிஷ்ணு (3) இரண்டாம் கந்தவர்மன் (4) வீரவர்மன் (5) மூன்றாம் கந்தவர்மன் (6) இரண்டாம் சிம்மவர்மன் (7) அவன் மகன் விஷ்ணுகோபவர்மன் ஆவர்” என்று அறிஞர் அறைதலும் நோக்கத்தக்கது.[1]


  1. D. Sircar’s “Sucessors of the Satavahanas’ p.391.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/93&oldid=583618" இலிருந்து மீள்விக்கப்பட்டது