பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிம்ம விஷ்ணு

79



போர்ச்செயல்கள்

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில் சிம்மவிஷ்ணுவைப் பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன; “இவனது புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”[1] இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில், “...பிறகு இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”[2] என்பது காணப்படுகின்றது.


  1. S.I.I. Vol.II p.510.
  2. Ibid.p.346.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/99&oldid=583325" இலிருந்து மீள்விக்கப்பட்டது