பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளேயாடல்கள் go?

உள்ளே இருக்கிறவள் இரண்டு தடவை முழுகி விட்டு வரு வாள். இரண்டு தடவையும், குட்டிகளா! மேலேபடாதே யுங்க’ என்று சொல்வாள். ஆனல் குட்டிகள் பட்டு விடும்! முன்ருந் தடவை பாடுவதில்லை. அதறகு உள்ளே இருக் கிறவள் எண்ணெய் விற்கிறவளேக் கூப்பிட்டுக் குழந்தை களுக்கு எண்ணெய் தேய்க்கச் சொல்வாள். அப்புறம் வெளியே இருக்கிறவள் அரைப்பு விற்பாள். குழந்தை களுக்கு அரைப்புத் தேய்க்கச் சொல்வாள், உள்ளே இறுக் கிறவள். அப்புறம் மஞ்சள். பிறகு தண்ணிர் கொண்டு வருவாள், வெளியே இருக்கிறவள். அப்புறம் வெந்நீர். உள்ளே இருக்கிறவள், குழந்தைகளுக்கு வெந்நீர் முழுக்கிடச் சொல்வாள்; அதன் பிறகு வெளியே இருக் கிறவள் முறையே கிழிந்ததுணி, நல்ல துணி, ஒடிந்த வளை, நல்ல வளே இவைகளேயெல்லாம் விற்பாள். நல்லவற்றை யெல்லாம் குழந்தைகளுக்குப் போடச் சொல்வாள், உள்ளே இருக்கிறவள். பிறகு சாம்பாடு, ஏழுகிண்ணம் வைத்துச் சாப்பாடு போடுமுன், சோதம் போட மாட்டேன்’ என்று சொல்லி ஓடுவாள். எல்லோரும் அவளைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சாதம் போடச் சொல்வார்கள், பிறகு,நெய் குத்த மாட்டேன்’ என்று சொல்லி, இதே மாதிரி மோருக் கும் சொல்வார்கள். உடனே பிடித்து வருவார்கள். அதன் பிறகு கணுக்காலிலிருந்து உச்சந் தலைவரை அளவு காட்டி,

  • இந்த முட்டும் பணந்தாரேன்

விடுடா துலுக்கா!’ என்பாள்.

- விடமாட்டேன் துலுக்கா1? என்று மற்றப் பெண்கள் கூச்சல் போடுவார்கள்.

பாலுஞ் சாதம் தரேன்; விடுடா துலுக்கா’

என்பாள். உடனே எல்லாரும் விட்டு விடுவார்கள். பிறகு ஒடிப் பிடித்தல். அவ்வளவோடு விளையாட்டு முடியும்.