பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் . 49

அப்ப வாரேன்; அவ்விடத்தில் பூச்சி இருக்குது; பூச்சிக்கு என்கையில் மருந்தி ருக்குது; கட்டாரிச் சேலே மேலே கண் இருக்குது;

மாமனுக்கும் எனக்கும் ஒரு வம்பிருக்குது.

நாலுகாய் விளையாட்டு

தட்டுத் தாம்பரம் மொட்டுப்போலே; தயிர் கடைஞ்ச வெண்ணெய் போலே; குத்தே சாலாட்சி, குடகுட மீனுட்சி, கஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, கங்கேபா கீரதி, யமுனே, சரஸ்வதி, உமக் கொரு குத்து குத்து குத்து பார்ப்பான், குத்திக் கொண்டு சாகிருன்; மேலாத்துப் பொண்களா, விளையாட வாருங்கோ, குத்தோரம், செம்போரம், குழக்கட் டைக்கு மாப்போரும்; குத்து ஒண்ணு, குழிக்கட்டை ரெண்டு, அப்பம் மூணு, அதிரசம் நாலு, - அத்தட்டு இத்தட்டு, மாமி தட்டு மரத்தட்டு: கண்ணுடிப் பொட்டு, கமலப் பூத்தட்டு; கஸ்தூரிப் பொட்டு.

பந்தடிப் பாட்டு

(1)

1. ஒத்தா ரெட்டா முத்து குப்பூ

மஞ்சள், மாடம், குஞ்சு, கூடம், !

பந்துகள் ஆயிரம் பார்த்தேன். 4 مسہ، &s . . . .