பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

பல வகை விளையாடல்கள்

சிறுக்கி கும்மி அடிக்கையிலே, சீவரசம் மின்ன நடக்கையிலே, ஆகாசத் தேர் வந்தால் - ஆகாதையா; ஐயம் பெருமாளே, கையை விடு;

கைவீசுதல் -

கைவி சம்மா, கைவிசு கடைக்குப் போகலாம் கைவிசு; மிட்டாய் வாங்கலாம் கைவிசு, மெதுவாய்த் தின்னலாம் கைவிசு;

முறுக்கு வாங்கலாம் கைவிசு; முடுக்காய்ச் சாப்பிடலாம் கைவீசு, சொக்காய் வாங்கலாம் கைவிசு; சொகுசாய்ப் போடலாம் கைவீசு, கம்மல் வாங்கலாம் கைவிசு; காதிலே போடலாம் கைவீசு, கோயிலுக்குப் போகலாம் கைவிசு; கும்பிட்டு வரலாம் கைவிசு; லட்டு வாங்கலாம் கைவிசு, பிட்டுத் தின்னலாம் கைவிசு, பழங்கள் வாங்கலாம் கைவிசு, பரித்து புசிக்கலாம் கைவிசு; அப்பம் வாங்கலாம் கைவீசு; அமர்ந்து தின்னலாம் கைவிசு; பூந்தி வாங்கலாம் கைவிசு; பொருந்தி உண்ணலாம் கைவிசு;