பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


“கண்ணா, கண்ணா, ஒரு சீட்டை எடு. ஐயாவுக்கு நல்ல காலம் சொல்லுகிற ஒரு சீட்டை எடு” என்று அந்தக் கிழவன் சொல்லுகிறான். சிட்டுக்குருவி வரிசையாக சரிந்து கிடக்கும் அட்டையில் ஒன்றைத் தன் மூக்கினால் கொத்தி இழுக்கிறது.



கிழவன் அந்தச் சீட்டை எடுத்து விரிக்கிறான். அதில் பலன் அச்சடித்திருக்கிறது. வாசிக்கிறான். விளக்கம் சொல்லுகிறான். தன் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு எதிரில் இருக்கிறவர் இருபத்தைந்து காசு ஒன்றைக் கொடுக்கிறார்.