பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38



பாரதி சாலையில் நடந்து செல்லும்போது வானத்தை நிமிர்ந்து பார்த்தால் மேலே அந்தச் சிட்டுக் குருவிகள் இரண்டும் ஒன்றாகப் பறந்து செல்வதைப் பார்க்கலாம்.

சாலையின் ஓரத்தில் நின்று பார்க்க வேண்டும். நடுவில் நின்று பார்த்தால் பார்க்கிறவர்கள் மேல் பேருந்து ஏறிவிடும்.

நாள்தோறும் அவை கடற்கரைக்குச் சென்று வரும். கடற்கரையில் அவற்றிற்கு நிறையத் தீனி கிடைப்பதால், மாலையில் அங்கு போய்விடும். கடற்கரையில் கூடும் மக்கள் கொறிக்கும் போது தவறிவிழும் தின்பண்டங்கள் நம்சிட்டுக்குருவிகளுக்குத் தீனிப் பொருள்கள்.

ஒரு நாள் அந்தச் சிட்டுக் குருவிகள் இரண்டும் கடற்கரையில் தீனி பொறுக்கித் தின்று விட்டுத் தங்கள் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது அவற்றின் எதிரில் ஓர் அழகான பெண் வந்து கொண்டிருந்தாள். அவள் நீலச் சேலை அணிந்திருந்தாள். அவளுடைய கூந்தல் காற்றில் விரிந்து ஆடிக்கொண்டிருந்தது. அவள் கண்களில் அருள் ஒளி தோன்றியது.