பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49



சாலை யோரத்தில் நின்ற சில சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் கூடி வந்த பறவைகளைக் கலைக்கும்படியான ஒரு செயல் செய்தார்கள்.

சாலை ஓரத்தில் கிடந்த கற்களை எடுத்துக் கூடிநின்ற பறவைகளின் மீது குறிபார்த்து அடித்தார்கள். இதனால் பல பறவைகள் காயப்பட்டன.

சிறுவர்கள் மேலும்மேலும் கற்களைப் பொறுக்கியடித்தார்கள். மகிழ்ச்சியாகக் கூடியிருந்த பறவைக் கூட்டத்தின் இடையில் வேதனையும் துன்பமும் பரவியது. சில காகங்கள் அந்தச் சிறுவர்களைக் கொத்துவதற்காகச் சாலை நோக்கிப் பறந்தன.

இதற்கிடையே சின்னச்சிட்டுக்கள் இரண்டும் 'அம்மா! கடலம்மா!' என்று கத்தின.

இந்தக் குரல் கேட்டவுடனே, கடலம்மா அவற்றின் கண்முன்னே தோன்றினாள். வானத்தில் அழகாக இறக்கை விரித்துப் பறந்தாள். ஒவ்வொரு பறவைக் கூட்டத்தையும் பார்த்து வாழ்த்து மொழிகளைக் கூறினாள். மேலே அங்கும் இங்கும் பறந்து கொண்டே-4-