பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4

சிட்டுக் குருவிப்
பட்டாளம்

பாராண்டபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அந்த மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள்.

அவள் ஒரே மகள். எனவே பாராண்டபுர மன்னருக்கு அவள் செல்ல மகள்.

அந்தச் செல்ல மகள் விளையாடுவதற்காக மன்னர் ஒரு சோலையை உண்டாக்கினார்.

ஊருக்குப் பக்கத்தில் உள்ள காட்டில் இந்தச் சோலையமைந்தது.

இதில் நிழல் தரும் பழ மரங்களும், மணந்தரும் பூஞ்செடிகளும், கொடிகளும் வளர்க்கச்