பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

திட்டினாலும், அதை மறைத்துக் கொண்டு பாராண்டபுர மன்னர் அமைதியாகவே பேசினார்.

'சிட்டரசனே, இது எல்லாம் என்ன? எதற்காக எல்லாச்சிட்டுக்களையும் அனுப்பி என் அரண்மனையை அல்லோல கல்லோலப் படுத்துகிறாய்?

'எனக்கும் உனக்கும் என்ன பகை? என்று மன்னர் கேட்டார்.

'மன்னர் பெருமானே, இந்த உலகத்தில் கடவுள் மனிதர்களை மட்டும் படைக்க வில்லை. விலங்குகளையும், நீர் வாழ்வனவற்றையும் பறவைகளையும் படைத்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது?’ என்று சிட்டரசன் கேட்டது.

'ஏ, சிட்டுக் குருவியே, நீ என்ன பள்ளிக்கூடம் நடத்துகிறாயா? இது என்ன பாடம் நடக்கிற வகுப்பா? என்று கேட்டார் மன்னர்.

‘அரசே, நீங்கள் பதிலைச் சொல்லுங்கள். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் தான் சொந்தமா?' என்று கேட்டது சிட்டு.