பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி ஆண்டவன், கடவுள், மகேஸ்வரன் இவைபற்றிய ஏடுகள் தேவைதான், என்று வாதத்திற்காக, பேச்சள வில் ஒப்புக்கொண்டு கவனித்தாலும், ஆபாச ஆண்டவனை யும், கருத்தற்ற கண்மூடிக் கடவுளரையும், பிறன் மனை யாளைப் பிடித்திழுக்கும் மதிகெட்ட மகேஸ்வரனையுமா, மாணவருக்குப் பாடமாக அமைத்திடவேண்டும்! பக்தி! நம்பிக்கை, நாதன் புராணம், நம்பினால் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்ற பயந்த பரம் பரைப் புத்தி, போகிற கதிக்குப் புண்ணியந் தரும் ஏடு, என்று எண்ணி நம்பிக்கை வைத்து சிந்தனையற்று, சீர் தூக்கியும் பாராது, கண்டனவற்றையெல்லாம், காலத்திற்கும் கருத்திற்கும் முரண்பட்ட நடத்தைகளை, முறையற்ற, தகாத கோட்பாடுகளைப்போற்றிப் புகழ்ந்து, அடாத. ஆகாத அக்கிரமங்களை, ஆண்டவன் அவதார மகிமை, திருவிளையாடல்கள் என்று படித்து பாடியாடி மகிழ்ந்திடும் 'பக்திப் போதை'யிலேயே, எதிர் காலச் சந்ததியையும் சிக்கிச் சீரழிய வைத்திடும் பணி யைப் பள்ளி வாழ்க்கையில், இனியும் புரிந்திடத்தான் வேண்டுமா, புராண, இதிகாச போதனைகள் மூலம்? ஆண்டவன், கடவுள், உலக அறிவிற்கு அப்பாற் பட்டவர். காணமுடியாத ஒரு சக்தி! பார்க்கமுடியாத ஒரு பொருள்! மனித சக்திக்கும் மீறிய ஒன்று! இயற்கை! என்ற கொள்கைதான் தேவை! ற பள்ளி வாழ்க்கையிலேயே மதமாச்சரியங்களை ஊட் 43