பக்கம்:பள்ளி வாழ்க்கை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. பள்ளி வாழ்க்கை விஞ்ஞானம் - பொது அறிவு - உலகியல் அறிவு இன்று முதலிடம் பெற்றுள்ளது, மனித வாழ்வில்! மனிதனது வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இன்று விஞ்ஞானம் இரண்டறக் கலந்துவிட்டிருக் கிறது! விஞ்ஞானம் மனித வாழ்வை மங்காத ஒளியாக, மட்டற்ற மகிழ்ச்சிப் பூங்காவாக, இருள் நீங்கிய வான மாக, உழைப்பைக் குறைத்து, உணர்வைப் பெருக்கிடும் துணைவனாக, தோழனாகத் தொண்டு செய்கிறது! விஞ்ஞானம், தொட்டவற்றில் எல்லாம் தோன்றித் துணை செய்கிறது, மனிதனுக்கு ! மனிதன் படிப்பதற்குத் தேவைப்படும், புத்தகங் கள், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள காகிதங்கள் விஞ்ஞான வளர்ச்சியின் அறிகுறி! அதனை அச்சிடும் அச்சு இயந்திரம், மனித உழைப்பைக் குறைத்து, ஓலைச் சுவடிகளில் எழுதும் ஓயாத உழைப்பைக் குறைத்து, உருவான தொண்டு செய்துள்ள விஞ்ஞான வளர்ச்சி யின், கண்டு பிடிப்புதானே! மனிதன் செல்லும் வண்டி, வாகனங்கள், ஓடும் இரயில், செலுத்தும் மோட்டார், பறக்கும் விமானம், பேசும் சினிமா, கீதமிசைத்திடும் கிராமபோன், பாடும் ரேடியோ,பார்த்திடும் டெலிவிஷன், காலம் அறிவிக்கும் 48