பக்கம்:பழக்கூடை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 6 பழக்கூடை அவலக்ஷண்ணத்தை யாரும் காதலிக்கவில்லை என்பதற்காக எங்கள் மீது சீறுகிறீர்”- சொல்லி முடித்தான் செல்வம், அவன் தோள் மீது இருந்த சந்தனத்தின் கைகள் திடீரென எடுக்கப்பட்டன. “அய்யோ! என்று தன் தலையில் பலமாக பலமுறை அறைந்து கொண்டான் சந்தனம், அவனால் நிற்க முடியவில்லை. மயக்கம் வந்துவிட்டது போலிருந்தது. அழ வேண்டும் நன்றாக அழவேண்டும் என்ற - உணர்ச்சி அவன் நெஞ்சத்தை கனமாக்கியது. ஆம்; அழுதேவிட்டான் -ஏழெட்டு வருடங்கள் சிறைச்சாலையிலே காலத்தைப்போக்கி, தன் அன்பு மகனைக் காண வந்த அவன் - இவ்வளவு பெரிய தீக்குண்டத்திலே தன்னைத் தள்ளி விடுவான் என்று எதிர் பார்க்கவில்லை. 'ஓ – வென அழுது விட்டான். பூமியிலே பதியவில்லை. குடிகாரனைப்போல் தள்ளாடினான். போதையில் உளருகிற விதத்திலே ஏதேதோ பேசினான் 6 பாக்கி - - கால்கள் “அவலட்சணம்! நீயும் கூறி விட்டாயா? நீதானடா உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கு, கடைசியாக நீ தந்த காணிக்கை, அவலட்சணம் என்ற பட்டம். இந்தப் பட்டம் பெறத்தானா, உன்னைத் தோளிலும், மடியிலும், தொட்டிலிலும் போட்டுத் தொல்லைகள் அனுபவித்து வளர்த் தேன். அழகே உருவெடுத்தவனே! அதனால் அகம்பாவம் கொண்டிருப்பவனே! கள்ளக் காதலியை அடிமையாக்கி வைத் திருக்கும்,உன் கட்டுக்குலையாத அழகு, இந்த அவலட்ச ணத்தால் தானடா வளர்க்கப்பட்டது! க - - அவலட்சணம் அகோரம் விகாரம் - அலங்கோலம்! அறிவு கெட்ட சிறுவனே! அவலட்சணத்துக்கும் அறிவுக்குந் தானடா உலகத்தில் நிரந்தரப் போட்டி! அதிலே அழகு ஜெயித்ததில்லை - ஜெயிக்க முடியாது! இன்று அழகு. நாளை விகாரம். இளந்தளிர், பழுப்பாகும். ளமை, கிழமாகும். அழகு, அலங்கோலமாகும். என் முகத்தைத் திராவகமும், தீயவனும் தீய்த்துவிட்டார்கள். ளமை தவழும் முகங்கள் கால ரேகைகளால் கரைபட்டுப் போகுமென்பதை மறந்து மறந்து விடாதே! கொய்யா இதழ் கொம்புத் தேன் கொட்டும் கன்னம் - குழிவிழுந்துபோகும்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/19&oldid=1696938" இலிருந்து மீள்விக்கப்பட்டது