பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് ஐ: Eானவை . . . . . . . . . . . . . . . . . . . . . . . 3 兹 & 冬 37 ಇಣ படைத்தாள். அவர்களில் பிரம்மா, உலகங்களையும், பொருள்களையும், உயிர்களையும் பிரக்ருதியிலிருந்தே படைத்தான். பிரக்ருதி என்ற பொருள், பெண் தன்மைகொண்டது, படைக்கும் திறனுடையது என்ற கருத்து புராணங்களின் படைப்புக் கதைகளில் இருந்து விளங்கும். மோஹன்ஜதரோவின் 'தாய்த்தெய்வம் இப்பொழுது ஆய்வாளர்களுக்குத் தெரிந்ததுதான். அத்தலத்தில் அகழ்வாய்வுகள் செய்த மார்ஷல் கூறுகிறார்: “முதலில் இங்கு புராதனத் தாய் தெய்வ வணக்கம் இருந்தது. இதன் பிறகு அவ்வணக்க முறையிலிருந்தே ஒரு கருத்துத் தோன்றியது. தேவி என்ற தனித்தெய்வம், அழிவில்லாத, சர்வசக்தி வாய்ந்த பெண் தத்துவமாகக் கருதப்பட்டது." . சாங்கியத்தின் பிரக்ருதி (பிரதானம்) தான் படைக்கும் ஆற்றல் உள்ளது. எல்லா உருக்கள் தோன்றுவதற்கு உடலாயுள்ளது. பரிணா.) முறையில் அதுவே உலகில் தோன்றுகிற எல்லாப் பொருள்களும், உயிர்களும் தோன்றக் காரணம், பிரக்ருதியின் படைப்பே உணர்வு. இதைப் புருஷன் என்றும் அழைக்கிறார்கள். புருஷன் சக்தியற்றது சாட்சிமயமானது. பிரக்ருதியின் செயலின் விளைவுகளை சாட்சியாக நின்று காண்கிறது. இதுவே பிரக்ருதி பற்றியும் புருஷன்பற்றியும் பூர்வசாங்கிய வாதிகள் கொண்டிருந்த கருத்து. இக்கருத்துக்கள் முற்றிலும் பொருள்முதல்வாதமாக இருந்ததால், பிற்கால தெய்வவாதிகள், ஆன்மீக வாதிகள் இதன் கருத்துக்களை மாற்றினார்கள். முந்திய சாங்கியம் நிரீஸ்வர சாங்கியம் என்ற பெயர் பெற்றது. காரணம் அந்தத் தத்துவம் ஈஸ்வரன் என்ற கர்த்தாவை ஒப்புக்கொள்ளவில்லை. மறுக்கவே செய்தது. பிற்கால ஆத்திகர்கள் இந்நிலையை மாற்றி புருஷன் என்ற சாங்கிய தத்துவத்தைக் கடவுளாக மாற்றி, சாங்கியத்தில் அதற்கில்லாத குணங்களை அதற்குக் கற்பித்து “கடவுளோடு சேர்ந்த சாங்கியம்” என்று பெயரிட்டார்கள். அதுதான் சேஸ்வர சாங்கியம்” என்பது ஈஸ்வர கிருஷ்ணர் என்ற தத்துவாசிரியர்'ஸாங்கியகாரிகை என்ற கபிலரது மூலநூலைக்கண்டு பிடித்து விட்டதாகக் கூறி அதற்கு உரையெழுதினார். உண்மையில் மூலமும் அவருடைய படைப்பே என்று தற்காலத் தத்துவாசிரியர்கள் நம்புகிறார்கள். சாங்கிய சூத்திரம் என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார். இது கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர்