பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடி பழங்கதைகளும் பழமொழிகளும் • • • • • • • • • • • • ه . ه . 96 பல வேறு பகுதிகளில் இருந்த தாய்த் தெய்வங்கள், செழிப்புத் தெய்வங்கள் நோய்த் தெய்வங்கள் இவற்றைப் பல புராணக் கதைகள் இணைத்து ஒன்றாக்கமுயன்றன. ஒரே பராசக்தியின் பல தோற்றங்கள் என்ற ஒரு தத்துவக் கருத்தை முன் வைத்தன. ஆயினும் சக்தியின் தோற்றங்கள் என்று கருதப்படுபவை, ஒவ்வொரு காலத்தில் வணங்கப்பட்ட தனித்தனித் தெய்வங்களே. லலித சகஸ்ரநாமத்தில் ஆயிரம் பெயர்களும், வருணனைகளும் உள்ளன. இவையனைத்திலும் இரத்தத்தோடு பெண் தெய்வங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. காளி மட்டும்தான் கருநிறம்படைத்தவள். ஆனால் இரத்தத்தை விரும்புவாள். இன்னும் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய சாதிகளால் வழிபடப்படுகின்றன. சக்தி வழிபாடு வேதாந்திகளால் வெறுத்து ஒதுக்கப்படுகிறது. நமது சமயங்கள் பொருந்தாதன எல்லாவற்றையும் பொருந்தவைக்கும் பெருந்தன்மையினால் முரண்பாடுகளை மழுங்கடித்துச் சக்தி வழிபாட்டை, வேதாந்தியும் ஒப்புக் கொள்ளுகிற நிலையைக் காண்கிறோம். லலித சகஸ்ரநாமம் என்ற ஆயிரம் தேவியரை வருணிக்கும் நூலை சங்கரர் எழுதியுள்ளார். பரமார்த்திக உண்மையென்றும் விவகாரிக சத்தியம் என்றும் பிரித்து, உண்மையில் உண்மையல்ல, பொய்யில் உண்மையானது என்றும், இரு வகையான உண்மைகளை வேதாந்திகள் கருத்தில் கொண்டுள்ளார்கள். அதில் சக்தி வழிபாடு விவகாரிக சத்தியம். விவசாய உழைப்பாளிகளிடம் ஆழ்ந்து வேரூன்றிவிட்டதால்வேறு சமயக் கருத்துக்களால் இதனை அழிக்க இயலவில்லை. எல்லா வகையான மத நம்பிக்கைகளையும் அழித்துவிடும் விஞ்ஞானம் ஒன்றே இந்த நம்பிக்கைகளை அழிக்கும். காரியங்களுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்படும் பொழுது கற்பனையான காரணங்களுக்கும் இயற்கைக்கு அதீதமான சக்திகளுக்கும் ஆதாரமில்லாமல் போய்விடுகிறது.