பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. 斷研。 靈歸蚤砸露璽密商母。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。 103 இது ! 3.2 இவற்றில் கோயில் பூசாரிகளான மாணிகள் திருப்பளிசாரகர்கள் முதலியோர் நியமனம் ஊதியம் பற்றி தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. பிராம்மணர், மாணிகள், கரணத்தார்களை சில மண்டலங்களின் பிரம்மதேயங்களின் சபையாரே தேர்ந்தெடுத்து அனுப்பி, அவர்களுடைய ஊதியத்தையும் அளிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது. எனவே சபைகளின் வருவாயிலிருந்து, அவர்கள் ஊதியம் பெறப்பட்டது. இதைக் குறிப்பிடும் கல்வெட்டு வருமாறு: கோராஜ கேசரி வர்மரான ரீ ராஜராஜ தேவர்க்குயாண்டு இருபத்தொன்பதாவது வரை, உடையார் ரீ ராஜராஜதேவர் உடையார் ரீ ராஜராஜீச்சுரம் உரையார்க்குச் சோழ மண்டலத்தும், பாண்டி நாடான ராஜராஜமண்டலத்தும் தொண்டை நாடான ஐயங் கொண்ட சோழ மண்டலத்தும் பிரமதேயங்களிலாரே அவ்வவ் பிரமதேயங்களில் பூமி சம்பத்தும், பத்து சம்பத்தும், அர்த்த சம்பத்தும் உடையராயிருப்பாரை: பூ பண்டாரஞ் செய்யப் பிராமணரையும் திரிப்பரிசாரஞ் செய்ய மாணிகளையும் கணக்கெழுத கரணத்தார்களையும் சந்திராதித்தவல் இடக்கடவார்களாக உடையார் இராஜராஜ தேவர்திருவாய் மொழிந்தருள." இதில் அவர்கள் ஊதியம் குறிப்பிடப்படவில்லை. 3.3 இதுபோன்றே கோயிலின் சங்கம் சொத்துக்களையும் ரீ பண்டாரத்தையும் பாதுகாக்கத் திருமெய்க்காப்புகளை நியமித்தது பற்றியும், அவர்களுக்கு ஊதியம் அளிக்க சபை ஊர், நகரங்களாகிய நிறுவனங்களைப் பொறுப்பாக்கியது பற்றியும் ஒரு கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இதைப் பற்றிய ஒரு கட்டுரை ஆராய்ச்சி இதழில் வெளியாகியுள்ளது. திருமெய் காப்புப் படையினர் ஊதியத்தை, அவ்வவர்களை அனுப்பி வைத்த நிறுவனங்களே ஏற்றுக்கொண்டன." இருப்பினும், கோயிலின் பெருஞ் செலவுக்கு சில நிரந்தரமான பொருளாதார ஏற்பாடுகளைச் செய்யும் அவசியம் ஏற்பட்டது. வருமானத்தை அதிகப்படுத்தாமல் இச்செலவுகளைச் செய்ய முடியாது. கோயிலுக்கு நிலவருமானமே முக்கியமானது. அதற்கு அரசு தேவதான நிலங்களிலிருந்து வரும் வருமானத்தை அதிகமாக்க வேண்டும்.