பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏 S S S S S S S Y S0 SS e SDDS S S S S S S S AAAAAA பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ 4.0 கோவில் செலவுகளுக்காக நிலங்களிலிருந்து வரும் வருமானத்தை அதிகப்படுத்த ராஜராஜதேவர் மூன்று ஆணைகள் பிறப்பித்தார். இது நில வருமானப் பாகுபாட்டை மாற்றியமைத்தது. அவற்றின் தன்மை என்னவென்பதை சில கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. - 4.1 பிரமதேயமென்பது பிராம்மண சபைகளின் ஆதிக்கத்திலுள்ள கிராமம். ஊர் என்பது பிராமணரல்லாதார் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமம். இவற்றின் நில உரிமைகளை மாற்றியும், கோயிலுக்கு குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளை பிறப்பித்தான். அக்கட்டளைகளில் ஒன்றைக் கூறும் கல்வெட்டுவருமாறு: கோராஜாகேஸ்ரி வர்மரான ரீ ராஜராஜ தேவர்க்குயாண்டு இருபத்தொன்பதாவது வரை, உடையார் ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி டிரீ ராஜராஜச்சுவரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டு வந்தங்களுக்குத் தேவதானமாக சோழ மண்டலத்தும் புற மண்டலங்களிலும் உடையார் ரீ ராஜராஜதேவர் குடுத்த ஊர்களில் ஊர்நத்தமும் ரீ கோயில்களும் குளங்களும், ஊடறுத்துப்போன வாய்க்கால்களும் பறைச்சேரியும், கம்மாண்சேரியும் சுடுகாடும் உள்ளிட்டு இறையிலி நிலங்களும் இறை கட்டின நிலத்தால் காணிக்கடன் ராஜகேலரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் இடக்கடவ பொன்னும் காகம் பேசிக் கல்லின் வெட்டின. இவ்வாறு தேவதான நிலங்களின் விளை நிலங்களுக்கு கோயிலுக்கு அளக்கவேண்டிய காணிப்பாட்டத்தை உயர்த்தி இறை கட்டின காணிக்கடனை அரசு நிச்சயித்தது. இதற்கு முன் அரசு வரியாக அளிக்க வேண்டிய இறையான நெல்லையும் பொன்னையும் கோயிலுக்கு ஊரார் அளித்துவந்தனர். இப்பொழுது ஊர் முழுவதையும் கோயிலுக்குச் சொந்தமாக்கி, விளை நிலங்களுக்கு இறை கட்டின காணிக்கடன் எனப்புதிதாக