பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖి நா. 隨鄧懿聽鄭隱鑫懿。。。。。。。。。。。。 ● 9 帕 @ & 多 匈 * ● 0 临 & 8 a Q 105 ಇಣ உயர்த்தி நிச்சயித்ததை பல கல்வெட்டுக்கள் கூறும். அக்கல்வெட்டு கூறும் செய்தியை அறிய ஒரே ஒரு உதாரணம் தருவோம். தென் கடுவாயான அருமொழிதேவ வளநாட்டு இல்லைனாட்டுப் பாகயூர். பள்ளியும் கணிமுற்றுட்டும் உள்பட அளந்தபடிநிலம் நூற்றுமுப்பத்து நான் கேய் எட்டுமாவின் கீழ் முக்காலே மும்மா வரையரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவிலும்; ஊர்நத்தமும் குளமும் கம்மாண சேரியும் பறைச்சேரியும் சுடுகாடும் இவ்வூர் நிலத்தை ஊடறுத்துப்போன வாய்க்கால்களாலும் இறையிலி நிலம் ஒன்பதேய் காணி அரைக்காணி முந்திரிகைக் கீழரை நீக்கி; இறைகட்டின நிலம் காணிக்கடன் ராஜகேஸ்ரியோடு ஒக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக் கடவ நெல்லுப் பன்னீராயிரத்து ஐந்நூற்று முப்பதின் கலனே இருதுணிக் குறுணி ஒரு நாழி.” இறையிலி நிலம் எவையென்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. "ஊர்நத்தமும் குளமும். ஒன்பதேய் காணி அரைக்காணி முந்திரிகைக் கீழரை நீக்கி" காணிக்கடன் செலுத்த வேண்டிய நிலம் தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது." தேவதான நிலமாதலால் ஊரார் செலுத்தும் இறையில் ஒரு பெரும்பகுதி கோயிலுக்குக் கிடைக்கும். ஆனால் இக்கல்வெட்டு, இறையை உயர்த்தி நிச்சயித்து, நிவந்தங்கள் பலவற்றால் உயர்ந்துவிட்ட கோயில் செலவுகளை ஈடுகட்ட முழு இறையையும் கோயிலுக்கே செலுத்த ஆணையிட்டதைத் தெளிவாக்குகிறது." இத்தகைய ஆணைகள் மூலம் கோயில் வருமானத்தை அதிகமாக்கியதைக் காட்டும் புள்ளி விவரங்களை மூன்று நீண்ட கல்வெட்டுகள் குறிப்பிடும்." (அட்டவணையைப் பார்க்கவும்). 5.1 இம்மூன்று கல்வெட்டுகளிலிருந்தும் ராஜராஜன் பெரிய கோவில் வருமானத்தை அதிகரிக்கச்செய்த வழிமுறைகள் தெளிவாகத் தெரிகிறது. தெளிவாகத் தெரிவனவற்றை மட்டும் கூட்டிப் பார்த்தால்