பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼 கட்டுரையிலும், உலகப் படைப்புப் புனை கதைகளும் அவற்றின் சமூக அடித்தளங்களும்” என்ற கட்டுரையிலும் முழுமைப்படுத்திச் சில முடிவுகளுக்கு வந்துள்ளேன். அதனைக்கட்டுரைகளிலேயே காணலாம். இவ்விரண்டு கட்டுரைகளும் முதல் பகுதி. இதனைப் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சி என்று கூறலாம். இரண்டாம் பகுதி மூன்று கட்டுரைகள் உள்ளன. தஞ்சைக் கோயிலில் இசை,நடனம்முதலிய நிகழ்விக்கராஜராஜன்,வருமானத்துக்கு ஏற்பாடு செய்த விதம் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. கிட்டத்தட்ட இச்செலவும், செலவுக்காக ராஜராஜன் செய்த வழி மாற்றங்களும் கல்வெட்டுக்களிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளன. இது சமூகவியல் துறை ஆராய்ச்சியாகும். கல்கத்தாவிலிருந்து வெளியாகும் Folk Lore என்னும் பத்திரிகையில் 32 திரிபுரிப் பழமொழிகள் வெளியாயின. அது எங்கள் குழுவின் சிந்தனையைத் தூண்டியது. உ. மீனாட்சி சுந்தரம், டி. மங்கை ஆகிய எனது மாணவ-மாணவியர் இப்பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழ மொழிகளைத் தேடிக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்டனர். ஒரு கள-ஆய்விற்குப் பின்னர், அநேகமாக எல்லாப் பழ மொழிகளுக்கும் கருத்து ஒற்றுமையுடைய தமிழ்ப் பழமொழிகளையும், உள்ளடக்கம் உருவம் இரண்டிலும் ஒற்றுமையுடைய பழமொழிகளையும் தேடிக் கொணர்ந்தார்கள். அதன்பின்னர் ஆய்வுதொடங்கியது. ஒற்றுமைக்கும், வேற்றுமைக்கும் காரணங்களை ஆராயும் ஒரு கட்டுரையை நான் எழுதினேன். இப் பிரச்சினைக்கு நான் தீர்வு கண்டுள்ளேன். கடைசிக் கட்டுரையும் புனை கதை மானிடவியல் Mythography இராமாயண நிகழ்ச்சிகளில் சில வட இந்தியாவில் மட்டும்தான் நடந்தது என்று H.D. சங்காலியா என்ற தொல்பொருள் அறிஞர் பண்டைய இராமாயணச் சுவடிகளையும், அவை குறிக்கும் தலங்களைத் தோண்டி ஆராய்ந்தும் முடிவுக்கு வந்துள்ளார். அவர் இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களையே தேசப்படத்தில் குறித்துள்ளார். தமிழ் நாட்டில் பல இடங்கள் இராமாயணக் கதைமாந்தர் அல்லது நிகழ்ச்சிகளோடு தொடர்புடையதலங்களாக, தலமாந்தர் நம்புகிறார்கள்.