பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஒப்பாய்வு ஷார் காந்தி நியோகி என்ற ஆய்வாளர் 'Folk Lore பத்திரிகையின் 15-வது மலர், முதல் இதழில் திரிபுரிமக்களது சில பழமொழிகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார். முடிந்த அளவிற்கு திரிபுரி பழமொழிகளுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்துள்ளார். அக்கட்டுரையில் வெளியிடப்பட்ட திரிபுரி பழமொழிகள், பரேந்திரதேவ் வர்மன் என்ற கிராம வாசியினால் சேகரிக்கப்பட்டது. அவருக்கு திரிபுரி மொழியும் வங்காளி மொழியும் தெரியும். இப்பழமொழிகளை அவர் தமது வயது முதிர்ந்த தாய் தந்தையரிடம் கேட்டு அறிந்தார். திரு. நியோகி மேற்குறிப்பிட்ட கட்டுரையின் முன்னுரையில் “பல மொழி பேகம் மக்களிடையே ஒரே விதமான கருத்துக்களும் கொள்கைகளும் நிலவுவதை அவர்களுடைய பழமொழிகள் காட்டுகின்றன” என்று எழுதுகிறார். இதற்கு உதாரணமாக 6, 17 எண்களிட்ட பழமொழிகளுக்கு வங்காளியில் இணைப் பழமொழிகளைக் காண்பித்து அவை ஒரே கருத்தைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

  • இக்கட்டுரையில் திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளைத் திரட்டித் தந்தவர் புலவர் டி மங்கை, சில பழமொழிகளைத் திரட்டித் தந்தவர் உ. மீனாட்சிசுந்தரம். இவ்விருவரும் நெல்லை ஆராய்ச்சிக் குழுவின் நாட்டுப் பண்பாட்டுத் துறையின் உறுப்பினர்கள்.