பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔 с 8 е а на s а в а а பழங்கதைகளும் பழமொழிகளும் জুক্ত "இவற்றின் கருத்தொற்றுமைக்குக் காரணம் என்ன? இரு வேறு மொழிகளில் வழங்கும் இப்பழமொழிகள் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவையா?” என்று வினவுகிறார். இக்கேள்விகளுக்கு அவர் விடையளிக்க முயலுகிறார். “ஒரு மூலத்தோற்றம்” என்ற விடை பொருத்தமற்றது என்று கூறிவிட்டு, அவர், மனிதனுடைய அறிவாற்றல் அளவில்வேறுபட்டபோதிலும் தன்மையில் ஒன்றாகவே இருக்கிறது” என்று அபிப்பிராயம் கூறுகிறார். பின்னர் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கடன் பெறுவது என்ற கொள்கையையும் - திரிபுரிப் பழமொழிகளை (5, 7, 9, 10, 15, 25 ஆகிய எண்ணுடையவை - வங்காளிப் பழமொழிகளோடு, ஒப்பிட்டு ஆராய்கிறார். எந்த மொழியிலிருந்து எந்த மொழி கடன் வாங்கியது என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்ற முடிவுக்கு வருகிறார். இவ்வொற்றுமைக்கு காரணம் இவ்விரு நாகரிகங்களின் சமூகப் பின்னணி ஒரே மாதிரி இருந்த காலத்தில் இப்பழமொழிகள் தோன்றியிருக்க வேண்டுமென கருத்து தெரிவிக்கிறார். இது மிகவும் உண்மையான கூற்றாகும். வெவ்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகள் கருத்தில் மட்டுமல்லாமல் உவமைகள், உருவகங்கள், குறியீடுகள், படிமங்கள் முதலிய வெளியீட்டுக் கூறுகளில் கூட ஒற்றுமை உடையனவாய் இருப்பதை பல மொழிகளில் உள்ள பழமொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் அறிவார்கள். உலகில் வெகு தூரத்திற்கு வழங்கிவரும் இரு மொழிகளில் ஒரே கருத்தும் ஒரே உருவ அமைப்பும் கொண்ட பழமொழிகள் கடன் வாங்கல் முறையால் தோன்றியிருக்க முடியாது. தமிழும் திரிபுரியும் நெடுந்தொலைவில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தினரால் பேசப்படுபவை. இந்திய நாட்டின் வடகிழக்கிலுள்ள இமயமலைப் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற திரிபுரி மக்களும், இந்திய நாட்டின் தென் கோடியில் வாழுகின்ற தமிழ் மக்களும் எந்தக் காலத்திலும் பண்பாட்டுத் தொடர்புகொண்டவர்களல்லர். ஆயினும் பரேந்திரதேவ் வர்மன் தொகுத்துதந்துள்ள 35 பழமொழிகளில் 32-க்கு கருத்தொருமை உடைய இணைப் பழமொழிகள் உள்ளன என்பதை எளிதான முயற்சியால் நான் கண்டேன். இவற்றுள் 32பழமொழிகளுக்கு நேரிடையான தமிழ் பழமொழிகள் உள்ளன. தமிழ் நாட்டுப் பாடல் ஆய்வாளர்களான குமாரி T. மங்கையும், உ. மீனாட்சி சுந்தரமும் 32