பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

经 * 砷 * * 学 ● * 伞 臀 ● ■ * * 夺 * பழங்கதைகளும் பழமொழிகளும் நமது தேசீய வாழ்வை உருவாக்குகின்றன. கடந்த காலத்தில் நமது நாட்டுப்புற சமுதாய வாழ்க்கை விரைவான மாறுதலில்லாமல் நிலைத்தும் தேங்கியும் இருந்ததால் வரலாற்று ரீதியில் பல கருத்துக்களும் சிந்தனைகளும் ஒரே மாதிரியான விதத்தில் பல பிரதேசங்களிலும் எழுந்திருக்கிறது. தேங்கிய நிலையிலுள்ள சமுதாயங்களின் கருத்துக்கள், பின்னர் அவை வளர்ச்சி பெறும் போதுகூட மாறாமல் நிலைத்துவிடுகின்றன. எனவேதான் திரிபுரி உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் தமிழ் நாட்டு உழைக்கும் மக்களது பழமொழிகளுக்கும் மிக நெருங்கிய ஒற்றுமைகள் காணப்படுகின்றன.