பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக பழங்கதைகளும் பழமொழிகளும் ۰۰۰۰ ه ه . . . . . . . . . . 142 காட்டில் வாழ்ந்த புராதன மனிதர்களின் மனத்தில் பல கேள்விகள் எழுந்தன: - தீ எப்படி உலகிற்கு வந்தது? செடி கொடிகள் ஏன் காய்கனிகளைத் தருகின்றன? செங்குரங்கின் முகம் சிவப்பாயிருப்பதேன்? கரடிக்கு மேலெல்லாம் உரோமம் இருப்பது ஏன்? காளைக்குக் கொம்பு இருப்பதேன்? எருமையின் கொம்பு வளைந்திருப்பதேன்? இந்த மலை ஏன் படுத்திருக்கும் பெண் போலிருக்கிறது? சந்திரனில் ஏன் முயல் உருவம் இருக்கிறது? குழந்தை எப்படிப் பிறக்கிறது? விதையிலிருந்து செடி ஏன் முளைக்கிறது? இவையாவும் பண்டைக்கால மனிதர்களால் விடை காண முடியாத புதிர்களாக இருந்தன. இவற்றிற்குப் பதில்களைக் காண அவன் புனைகதைகளைப் (myths) புனைந்தான்.' விஞ்ஞான அறிவு தோன்றுமுன் புனைகதைகளால் அவன் தனது வினாக்களுக்கு விடை கண்டான். விஞ்ஞானத்தின் தாய் புனைகதைகள்’ என்றுமானிடவியலார் கூறுவர். உலக முழுவதும் பண்டை இனக்குழுமக்கள் புனைகதைகளை உருவாக்கித் தங்கள் மனத்தை உறுத்தும் கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டார்கள். மிக முற்காலப் புனைகதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தோற்றப் புனைகதைகள் (Origin myths) ஒரு பொருள், நிகழ்ச்சி, குணம், மாறுதல் முதலியவை எப்படித் தோன்றின என்பதைக் கூறும் கற்பனைக் கதைகள் இவை. காவிரி தோன்றியது எப்படி? அகஸ்தியர் கமண்டலத்தைக் காக்கை கவிழ்த்து விட்டதால் காவிரி தோன்றியது. நெருப்பை மனிதன் எப்படிப் பயன்படுத்தத் தொடங்கினான்? ஜாகர் என்ற தென்னமெரிக்க மிருகத்திடம் நட்புக்கொண்டு அதன்