பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

в ф о а ф о . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் கூறி, இந்த இடம் புனிதமாக்கப்பட்டது. இது நாட்டு நம்பிக்கையோடு, இராமாயணக் கதையின் நம்பிக்கைகளின் இணைப்புத்தான். முன்னரே இராமனை உயர்வாகவும், அனுமனைத் தாழ்வாகவும் இருநிலைகளில் இணைத்த புனைகதையை அனுமகுண்டம் பற்றிய கதையில் கண்டோம். அனுமனைப் பற்றியே மிகப் பல புனைகதைகள் உள்ளன. அவற்றுள் சில இடங்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. குரங்கு குலக்குறி விலங்காகப்பலகாலமாக இருந்து வந்துள்ளது. மிகப் பண்டைக் காலத்தில் மனிதனோடுள்ள உருவ ஒற்றுமையால் அவனைக் கவர்ந்துள்ளது. மந்திரங்கள், வசியங்கள் முதலியவற்றோடு தொடர்புடையதாக இருந்தது. தற்காலத்தில், இராமனோடு தொடர்பற்ற தனி அனுமான் சிலைகள், மிகப் பெரிய சிலைகள் உள்ளன. பிற்காலத்தில் இராமர் கோயில்களை அவற்றின் முன் கட்டியிருக்கிறார்கள். உதாரணமாக நாமக்கல் அனுமார், சுசீந்திரம் அனுமார் சிலைகளைக் கூறலாம். சில பகுதிகளில் இராமனை அனுமான் வணங்கும் வழக்கம் இருக்கிறது. சூன்யம், வசியம், மந்திரம், பேயோட்டம் முதலியவற்றில் அனுமானுக்குப் பங்குண்டு. எனவே நாட்டார் நம்பிக்கைகளில் அனுமானைப் போன்றதோர் மனித விலங்கிற்கு மனிதனை விட அதிக சக்தியிருப்பதாகக் கருதப்படுகிறது." இராமனைப் பற்றிய புனைகதைகளில் அவனுடைய குணம், செயல்கள் பற்றி ஆராயும்போது இராமனைவிட, காப்பியத்தின் சிறு கதாபாத்திரங்கள் நாட்டு மக்களின் கற்பனையை ஏன் கவருகின்றன என்று காண்போம். இங்கு அனுமனோடுதொடர்புடைய புனைகதைகளை ஆராய்வோம். அவை நெல்லை மேற்கு மலையோரங்களிலும், குமரியின் மேற்கு மலையோரங்களிலும் வழங்கி வருகின்றன. இவையாவும் இராமனுக்கு உதவி செய்கிற செயல்களோடும், விலங்கின் உடல் வலிமையோடும் தொடர்புடையவை. புனைகதை 2 மட்டும் இராமாயணத்தோடு தொடர்புடையது. 3, 4, 5-வது கதைகள் அனுமனைப் பற்றியவை. 3-வது கதையை ஒதுக்கி விட்டுப்பார்த்தால், 4-வது கதை திருக்குறுங்குடி மலையோடும், 5-வது கதை குமரிமாவட்ட மலைகளோடும் தொடர்புடையவை. -