பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

áప్తి sيمر ZYSOmOmmYmmOLL SAS A SAS SSAS SSAS SSAS SSAS f குறியீடு மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கும் புனைகதைகளும் எழுந்தன. இதனைப் போலவே புராதன மக்கள் பாபிலோனியாவில் “தம்மூஸ் - இஷ்டார்” கதையையும் புனைந்தனர்.” நாகரிகத் துவக்க காலத்துப் புனைகதையொன்றின் தன்மையை மேலே கண்டோம். இக்கதைநாகரிக முற்காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். சமுதாய மாற்றங்களால் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களால் கதை மாறியிருக்க வேண்டும். நாகரிக காலத்துக்கு முன்னர் எகிப்தை அரசிகள் ஆண்டனர். அவர்கள் மனம் செய்து கொள்வதில்லை. விரும்பிய ஆண்மகனோடு ஓராண்டு வாழ்ந்து பின்னர் அவனைப் பலியிட்டுவிடுவார்கள். இது பெண்ணாதிக்க விவசாய சமுதாயத்தில் நடைபெற்றது. கலப்பை விவசாயம் தோன்றிய பின்னர் ஆணாதிக்க சமுதாயம் படிப்படியாக எழுந்தது. அப்போது அரசி காதலனைக் கொல்லுவது நின்றது. ஆனால் ஒரு நாள் அவள் அரச பதவியை இழந்து, வேறொருவனுக்கு அதனை அளித்து அவனைப் பலியிடும் வழக்கம் தோன்றியது. (Substituted sacrifice) ú6ir6Tii, ggjSjí fiíürgj ggéréìiflìù @gj„g; உயிர்ப்பித்தலை பொம்மை இறந்து உயிர் பெறும் சடங்காக மக்கள் கொண்டாடி இருத்தல் வேண்டும். இம்மாறுதல்கள் நடந்த கால எல்லையில்தான் ஹோரஸ் ஆஸிரிஸ் கதை புனையப்பட்டிருத்தல் வேண்டும்." இப்புனை கதைபோலவே, பல இயற்கை நிகழ்ச்சிகளைப் பற்றிய சடங்குகளும் அவற்றிலிருந்து தோன்றிய புனை கதைகளும் பண்டைய மக்களிடையே வழங்கிவந்தன. சூரியனைப் பற்றிய சடங்குகளும் கதைகளும், சந்திரனைப் பற்றிய சடங்குகளும் கதைகளும், அக்கினியைப் பற்றிய சடங்குகளும் கதைகளும் பண்டைய நாத்திக நாடுகளில் வழங்கி வந்தன. மூலக்கதை சமுதாய மாற்றத்திற்கேற்ப அவ்வச் சமுதாய மாற்ற கட்டத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது. எனவே புனைகதைகள் தற்காலப் படைப்புக் கதைகளைப் போன்றவையல்ல. அது ஒரு கால வாழ்க்கையேயாகும். அதாவது வாழ்க்கையை இயக்கும் நம்பிக்கைகளை அவை அடிப்படையாகக் கொண்டவை. இதனால்தான் பேராசிரியர் மாலினாவ்ஸ்கி பின்வருமாறு கூறுகிறார்: