பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് 12 . . . . . . 3 * * * * s or . பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ நாங்கள் அளிக்கிறோம். உனது ஆயுதங்களை யாரும் எதிர்த்து நிற்க முடியாது. கலகம் செய்யும் தேவர்களை வீழ்த்து. உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னைப் பணிபவர்களைக் காப்பாற்று.” ஒரு துணியைக் கீழே விரித்து அவனை அதைப் பார்த்து வாயால் ஊதச் சொன்னார்கள். அவன் அவ்வாறே செய்தான். துணி மறைந்து போய்விட்டது. பின்னர், 'வா என்று கூப்பிட்டான். துணி தரையில் கிடந்தது. இந்த அடையாளத்தைக் கண்டதும்தேவர்கள் “மன்னன் வாழ்க’ என்று ஆர்ப்பளித்தனர். மொரோடாக்கின் யுத்தத் தயாரிப்புக்களை இனி மூலக்கதை மிக விரிவாகக் கூறுகிறது. அதனைச் சுருக்கமாகக் கூறுவோம்: 1. வில்லையும் அம்பறாத்துணியையும் அவன் தோளில் மாட்டிக் கொண்டான். 2. கையில் கதையை எடுத்துக்கொண்டான். 3. அனு அவனுக்கு ஒரு வலையைக் கொடுத்தான். 4. மொரோடாக் ஏழு காற்றுக்களை உண்டாக்கினான். அவை அவனைப் பின் தொடர்ந்து சென்றன. இடிமின்னலை ஆயுதமாகக் கையில் எடுத்துக்கொண்டான். விஷ மூச்சு வீசும் நான்கு குதிரைகள் கட்டிய தேரில் குதித்தேறி அமர்ந்தான். அவன் தேரில் முன் செல்ல தேவர் படை பின் தொடர்ந்தது. அவன் தியாமத்தின் மறைவிடத்திற்குப் போய்ச்சேர்ந்தான். கிங்குவும், தியாமத்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வினாடி அவன் தயங்கினான். இதற்குள் அவள் அவனைப் பார்த்துவிட்டாள். உறுமிக்கொண்டே ஓடிவந்தாள். அவன் அவளைப் படைதிரட்டிக்கொண்டு போருக்கு வருமாறு அழைத்தான். - ஆனால் அவள் நேரில் அவனை நோக்கி வந்தாள். மொரோடாக் அனு தனக்கு கொடுத்த வலையை வீசினான். அவள் தன் வாயைப் பிளந்தாள். அது ஏழு மைல் அகலமிருக்கும். அவள் வாயை மூடிவிட முடியாமல் மொரோடாக் காற்றை அவள் வாயினுள் வீசுமாறு கட்டளையிட்டான். காற்று வீசியது. திறந்த வாயை அவளால் மூடமுடியவில்லை. அவளது இதயம் வலிமை குன்றியது. அவள் மூச்சுத் திணறினாள். மொரோடாக் அவள் வயிற்றை நோக்கி ஓர் அம்பை