பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* : 15 • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • فيEditHER THE Hta38RE R . تر ټولو ಇಣ இராட்சஸர்களும் இருந்தனர். கடலையும், வானையும், தேவர்களையும், ராட்சஸர்களையும் தியாமத்தான் படைத்தாள். அவளுக்கு அப்ஸ்) என்ற கணவன் இருந்தான். தேவர்கள் அவனைக் கொன்றபிறகு கிங்கு என்ற வேறோர் கணவனை அவள் நியமித்துக்கொண்டாள். அவனுக்கு அவளே உலகத் தலைமையை அளித்தாள். எனவே உலக ஆதிபத்திய உரிமை அவளிடமே இருந்தது. - அவளை அனு, அன்ஷார், இயா, மொரோடாக் முதலிய தேவர்கள் தாய் என்று அழைத்தார்கள். ஆயினும் தனது இரத்த பரம்பரையோடு அவள் ஏன் விரோதம் கொண்டாள் என்று அனு என்னும் வானதேவன் கேட்கிறான். நமக்கும் இக்கேள்வி தோன்றத்தான் செய்கிறது. அவள் பிரபஞ்சத்தில், குழபயத்தை விளைவிக்கப் புயல்களை உண்டாக்கினாள். தேவர்கள் அமைதியையும், ஒழுங்கையும் விரும்பினார்கள். அதனால்தான் மொரோடாக் அவள் மீது போர் தொடுத்து முடிவில் அவளைக் கொன்றான். அவள் உயிரோடிருக்கும் பொழுது வானையும், கடலையும், தேவர்களையும், ராட்சஸர்களையும் படைத்தாள். இறந்த பின் அவளுடைய உடலிலிருந்து பூமியையும், வான முகட்டையும் மொரோடாக் படைத்தான். அவன் தனிப்பெரும் தேவனானபின், தன்னையும் தனது பரிவார தேவர்களையும் வணங்க மனிதனைப் படைத்தான். கதையின் அடிப்படைக் கருத்துக்கள் இவை. இக்கருத்துக்கள் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கோடு வளர்ந்தவை. சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை அறிந்துகொள்ளாமல் அதன் மேற்கோப்பாகத் தோன்றி மாறுதல்களடைந்து வளர்ந்த கருத்து வளர்ச்சியை அறிய முடியாது. உதாரணமாக உலகின் ஆதிப் படைப்பாளி ஏன் ஒரு பெண்ணாக எண்ணப்பட்டாள்? தாய் ஏன் தன் மக்களைப் பகைத்தாள்? தாயைக் கொல்ல ஏன் மொரோடாக் முன் வந்தான்? பின் மனிதனைப் படைத்தவன் ஏன் ஆணாக எண்ணப்பட்டான்? என்ற வினாக்களுக்கு மொரோடாக் கால சமூக அமைப்பு, அதில் ஏற்பட்ட கருத்துக்கள், அதற்கு முன் இருந்த கருத்துக்கள், இவற்றின் இயங்கியல் முரண்பாடுகள், அதன் விளைவாகத் தோன்றிய கூட்டுக் கருத்து இவையனைத்தையும் நாம் ஆராய்தல் வேண்டும். இதனை இவ்விடத்தில் ஆராய்ந்துவிட்டால்