பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీ 鳕,母犀邸酰强母函······。 ● 梨 a * * * * ° * 将 ° # 的 验 * 小 ● 交 * 19 நிறுவனங்களையும் சமுதாயங்களின் வளர்ச்சியடைந்துள்ள நிலைகளோடு பொருத்திக் காட்டவில்லை. எந்தப் பண்பாடு எந்த வளர்ச்சி நிலையில் தோன்றியவை என்பதையும் ஆராயவில்லை. இத்தவறுகளை லீவிஸ் ஹென்றி மார்க்கன்" என்ற அறிஞர் தமது கொள்கைகளால் ஒருவாறு நீக்கினார். தனித்தனி நிறுவனங்களை, அவற்றின் சமூக வளர்ச்சியை கவனியாமல், ஆராயாமல் சமுதாயப்படி முறை வளர்ச்சியை முழுமையாக ஆராய்ந்தார். சமுதாயங்களை அவற்றின் வளர்ச்சி நிலைக்கேற்றபடி எண் வரிசையில் வரிசைப்படுத்த முயன்றார் மூன்று கால கட்டங்களாக அவற்றைப் பகுத்தார்: (1) லாவேஜரி, (2) பார்பரிலம், (3) நாகரிகம். இப்பகுப்பைச் செய்ய அவர் அடிப்படையாகக்கொண்டது அவ்வப் பண்பாட்டு மக்கள் கையாண்ட உற்பத்திக் கருவிகளே. இதனால் அவருடைய பகுப்புக்குரிய சான்றுகளை அகழ்வாராய்ச்சி அளிக்கமுடியும். அவர் மானிடவியலையும் சமூகவியலையும் புறவய ஆராய்ச்சியாக மாற்றும் வழியைக் காண்பித்தார். பழைய பண்பாட்டை அறியக் கருவிகள் மற்றும் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருள்களைச் சான்றுகளாகக் கொண்டதால் சமுதாயவியலை ஒர் புறவியல் விஞ்ஞானமாக அவர் மாற்றிவிட்டார். இக்கருவிகளின் வளர்ச்சியை அகழ்வாராய்ச்சிச் சான்றுகளின் மூலம் கண்டு பொருளுற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை உய்த்துணர்ந்து, அதன் உற்பத்தி விநியோகம் ஆகிய சமூகச் செயல்களுக்கான சமுதாய நிறுவனங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன என்பதையும் அவை பண்டைக் காலம் முதல் அடைந்த மாற்றங்களால் ஏற்பட்ட சமுதாய பரிணாமத்தையும் காணவேண்டும் என மார்கன் போதித்தார். இப்பரிணாமத்தின் அடிப்படையிலேயே கருத்துக்கள், நம்பிக்கைகள், சமயங்கள், சட்டங்கள் எல்லாம் தோன்றுகின்றன. எனவே கருத்துக்களின் உற்பத்தி, சமுதாய பொருளுற்பத்தி முறையோடும் அச்சமுதாயத்தில் மக்கள் ஒரு பிரிவினரோடு மற்றோர் பிரிவினர் கொள்ளும் உறவுகளிலிருந்தும் தோன்றுவதாகும். “கார்ல் மார்க்சும், பிரடரிக் ஏங்கெல்சும் மார்கனுடைய பண்டைய சமுதாய திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அவருடைய மானிடவியல் கொள்கைகள் பெரிதும் ஆற்றல் பெற்றன. இது தற்செயல்