பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వజీ ZTS TmmOmmmmmmTT SAASAASSAAAASSSAAASSSAAASSSAAASSSAAASS AAAA S 21 இவ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் தாம்ஸன் தற்கால இனக்குழு மக்களின் சமுதாயங்களின் வளர்ச்சி நிலைப்படிகளை வரையறுத்தார்." கீழ்நிலைவேட்டைச் சமுதாயம் - தொழில் - உணவு சேகரித்தல் - வேட்டையாடுதல். 2) உயர்நிலை வேட்டைச் சமுதாயம் - தொழில் வேட்டையாடுதல், மீன் பிடித்தல். மேய்த்தல் - 1. ஆடுமாடுகளைப் பிடித்தல் - வளர்த்தல். 2) ஆடுமாடு வளர்ப்போடு, விவசாயம் செய்தல். விவசாயம் 1) கலப்பையின்றி விவசாயம். 2) கலப்பை விவசாயம். . 3) கலப்பை விவசாயத்தோடு, ஆடு மாடு வளர்ப்பு. “இவ்வளர்ச்சி முறைபற்றி எங்கெல்ஸ் கூறுவதாவது: இந்தப் படிமுறை வளர்ச்சி குறிப்பிட்ட காலகட்ட வளர்ச்சியாக இருக்கவில்லை. உணவு சேகரித்தலும் வேட்டையும் எல்லாச் சமுதாயங்களிலும் முதலில் தோன்றின. ஆனால் அவற்றிற்கு உயர்ந்த வாழ்க்கை நிலைகள் தோன்றுவது குறிப்பிட்ட பகுதிகளின் தாவர நிலைகளையும், சூழ்நிலைக் கூறுகளையும் பொறுத்துள்ளது. முதல் கட்டத்திற்குப் பின் சில பகுதி மக்கள் மேய்ச்சல் (Pastoral) வாழ்க்கைக்கு மாறினர். சில பகுதி மக்கள் முதல் கட்டத்திற்குப் பின் விவசாயத்தைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு பாதைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இனக்குழு வாழ்க்கையை அழித்தது. இரண்டு சமாந்தரப் பாதைகளில் பண்டைய இனக்குழு மக்கள் சமுதாயங்கள் நாகரிகத்தை நோக்கிச் சென்றன. தற்கால இனக்குழுமக்களின் சமுதாய மாற்றங்களை ஆராய்பவர்களும் இதனையே காண்கிறார்கள்'" இதனிடையே நாம் பாபிலோனியப் படைப்புக் கதையை ஆராய்வோம்.