பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வானமாமலை . . . . . 9 s 9 g a 9 § 9 s e są : * * * * * * * * * * 2 ಇಣ தோன்றுவாள். அவ்வடிவங்கள் இரவு, ஒழுங்கு, நீதி என்பன. அவர்களது குகையின் முன் ரீயா என்ற தேவி ஒரு வெண்கல முரசை முழக்கிக்கொண்டு காவல் காத்தாள், இத்தேவியின் சாலினிகள் இங்கிருக்கிறார்கள் என்பது முரசு முழக்கத்தின் பொருள். பானஸ் என்ற இருளின் மகன் உலகம், வானம், சூரியன், சந்திரன் முதலிய பொருள்களைப் படைத்தான். ஆயினும் மும்முகம் உடைய இருள்தேவி உலகையாண்டு வந்தாள். அவளுக்குப்பின் யூரானஸ் செங்கோல் செலுத்தினான். இக்கதையில் முதல் கதையின் வளர்ச்சியைக் காண்கிறோம். இருள்தேவி, யூரோநோமை ஒத்திருக்கிறாள். ஆர்போன் என்ற பாம்பிற்குப் பதில் ஒஷியானஸ் அவளை அணைக்கிறான். ஒஷியானஸ் கடலாகும். - மிகப் பிற்காலக் காதல் தெய்வம் மிகப் பழைய படைப்புத் தெய்வத்தின் மகனாக்கப்பட்டு அவனே உலகைப் படைப்பவனாகக் கூறப்பட்டுள்ளான். இருள் தேவியின் மும்முகமும் அதனுடைய பொருளும், வளர்ச்சியடைந்த ஒழுங்கு நீதிக் கருத்துக்கள் கொண்ட சமுதாயத்தில் வாழும் மனிதருடைய சிந்தனைகள். இரவின் வெள்ளி முட்டை சந்திரன். சந்திரனைப் பற்றி பல, புனைகதைகள் தோன்றி விட பழைய படைப்புக் கதையில் அவனைப் புகுத்தியுள்ளனர். இந்த வளர்ச்சியடைந்த கதையில் முதல் கதையைவிட படைப்பில் ஆணின் பங்கு அதிகமாக்கிக் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் இருள்தேவியே உலகை ஆளுகிறாள். அவளுடைய காவல் தெய்வமும் சாலினிகளும் பெண்களே. ஆனால் கதை புனையப்படும்பொழுது யூரானஸ் என்ற ஆண் தெய்வம் உலகத்தை ஆளும் தெய்வமாக கருதப்பட்டது. எனவே அக்கருத்து தந்தைவழிச் சமுதாயமும் தாய்வழிச் சமுதாயமும் இணைந்ததையே குறிப்பிடுகிறது. ஆனால் போர்கள் எதுவும் நிகழவில்லை. முதல் கதையில் யூரிநோம், ஒபியோனைத் தலையில் மிதித்து ஒரு குகைக்கு விரட்டினாள் என்றிருக்கிறது. இக்காலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டிற்குப் பின் தாய்வழிச் சமுதாயமும், தந்தை வழிச் சமுதாயமும் சமாதானமாக இணைவதாகத் தோன்றுகிறது. இந்தச் சமுதாய மாற்ற நிலைமைகளில் கிரேக்கர்கள் இக்கற்பனைக் கதைகளைப் படைத்திருக்க வேண்டும்.