பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക് a * * * * * * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் பாம்பு வணக்கம் என்ற நாக வணக்கம் உலகம் முழுவதிலும் காணப்படுவது. அது அச்சுறுத்தும் தெய்வமாகவும், செழிப்புத் தெய்வமாகவும் ஆண் உருவம் பெண் உருவம் ஆகிய இருபால் உருவங்களிலும் வழிபடப்படுகிறது. மிகப் பண்டைக் காலத்தில் நாக வழிபாடு இருந்ததென்பதற்குச் சான்றுகள் உள்ளன." பாபிலோனியக் கதையில் படைப்பு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் கதையில் பாம்பிற்கு இடமில்லை. ஆனால் தியாமத் மொரோடாக்கை எதிர்த்துச் செல்லும் பொழுது பெரிய மலைப்பாம்புகளைப் படைத்தாள். இதனால் தியாமத் கதை தோன்றிய பொழுது பாபிலோனியாவில் நாக வணக்கம் முக்கியமானதாக இல்லை என்று அனுமானிக்கலாம். ஆனால் பல குழுக்கள் தோன்றி, ஒன்றாக இணையும் நிலையில் நாகர் வணக்கம் இருந்ததென்பது தியாமத்படைத்த விலங்குகளில் நாகமும் ஒன்றென்று படைப்புக்கதை குறிப்பிடுவதால் புலனாகிறது. நாகர் குழு தியாமத் குழுவினரோடு சேர்ந்து கொண்டதையே இக்குறிப்புக் காட்டுகிறது. இது போலவே நாராயணன் - படைப்புக் கதையில் பாம்பு அவரது படுக்கையாக மட்டும் உள்ளது. இதுவும் நாராயணனை வழிபட்ட ஆடு மாடு வளர்த்த மக்கள், நாகர் வழிபாடுடையவர்களை வெற்றி கொண்டனர் என்பதைக் காட்டும். கிரேக்கக் கதையில் ஒஷியானஸ் கடல் நீரோட்டமாகும். தீவுகளில் வாழ்ந்த மக்கள் கடலையே தெய்வமாக்கி வழிபட்டதால் படைப்புக் கதையில் ஒஷியானஸ் இடம் பெறுகிறான். பலயிடுதலால் நன்மை உண்டாகும் என்று கருதி போலி மந்திரச் சடங்குகள் (Sympathetic Magic) செய்தல் பண்டைக் கால இனக்குழு மக்களின் சமயத்தில் முக்கிய காரணமான அம்சமாகும்." இதனால்தான் தியாமத்தின் உடலைப் பிளந்து வானையும், உலகையும் மொரோடாக் படைத்ததாகப் புனைகதையில் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அது தாய்வழி மக்கள் சமுதாயத்தில் தோன்றிய கற்பனை. புருஷனைப் பலியிட்டு உலகம் புடைக்கப்பட்டதாகக் கூறும் புருஷ சூக்தக் கதை, வேத கால மாடுமேய்க்கும் சமுதாயத்தில் வாழ்ந்த தந்தை வழிச் சமுதாயத்து மக்களின் கற்பனை. இவ்வாறாக பலியிடும் சடங்கு, செழிப்புச் சடங்குகள், இனக்குறி விலங்கு வழிபாட்டுச் சடங்குகள், படைப்புக் கதை தோன்றிய காலத்தில்