பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் படைப்புப் புனைகதைகளும், அவற்றின் சமூக அடித்தளங்களும் ண்டைய மனிதன் உலகம் தோன்றிய விதம் பற்றிச் يومية ولا அவனுடைய சிந்தனை அவன் இயற்கையோடு கொண்டிருந்த தொடர்பைப் பொறுத்து வேறுபட்டது. இயற்கையோடு அவன் கொண்டிருந்த தொடர்பு, அவன் அதனோடு போராடி அதன் பொரு களைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்வதில் அடைந்த வெற்றிகளைப் பொறுத்திருந்தது. அவன் இயற்கையோடு தொடர்பு கொள்வதற்குத் தன்னைப் போன்ற மனிதர்களோடு இணைந்து சமூகக் குழுக்களை உருவாக்கிக் கொண்டான். தன்னுணர்வும், சமூக உணர்வும் எந்த நிலையில் இருந்தனவோ அந்த நிலையில்தான் அவன் உலகம் தோன்றிய விதம் பற்றிக் கற்பனை செய்து படைப்புக் கதைகளைத் தோற்றுவித்தான். தான் வாழ்ந்த இருப்பு நிலையில் இருந்து உலகம் தோன்றிய முந்திய கால நிலைமையைப் பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்கிற பூமியையும், தனக்கு மேலேயுள்ள வானத்தையும் பற்றி எண்ணினான். உலகம் முழுவதிலும் வாழ்ந்த மக்கள், இவையிரண்டும் ஒன்றாயிருந்து பின்னர் பிரிந்ததாக முதன் முதலில் எண்ணினார்கள். உலக முழுவதிலும் இத்தகைய சிந்தனை தோன்றியது. பண்டைகால மக்களின் நாகரிக நிலைகளில் இன்றும் வாழ்கிற இனக்குழு மக்களின் சிந்தனையும் அவர்களுடைய சிந்தனை நிலையிலேயே இருக்கிறது.