பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీః 48 ళిజ్ఞప్తో }

  • * * * * * * * * * * * * to $ & பழங்கதைகளும் பழமொழிகளும்

சமூக வாழ்க்கையை அடித்தளமாக கொண்டு அதன்மீது கற்பனையால் கட்டப்பட்டுள்ளது. குழந்தைத்தனமான கற்பனையால் புனைகதை புனையப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. - அவர்கள் இனம் காணக்கூடிய 9 வகையான உயிரினங்கள் முதலில் படைக்கப்பட்டன. வாந்தியெடுத்து பம்பா அவற்றைப் படைத்தான். வாந்தியெடுக்கும்முன் அவனுக்கு வலியெடுத்தது. இயற்கைக்கு மாறாக பெண் மகவு பெறுவதுபோல் ஆணுக்கு வலி வந்ததாக இக்கற்பனை அமைந்துள்ளது. பம்பா பெண் என்று சொல்லப்படவில்லை. எனவே இச்சமுதாயம் ஆண் வழி உரிமையும், பெண்வழி உரிமையும் கலந்த சமுதாயமாகத் தோன்றுகிறது. இந்தியாவில் உலகப் படைப்பு பற்றி இரு வகைப் புனைகதைகள் உள்ளன. ஜகன்மாதா உலகைப் பெற்றெடுத்தாள் என்றும், பிரம்மா உலகைப்பெற்றெடுத்தான் என்றும், நூற்றுக்கணக்கான புனைகதைகள் உள்ளன. இவையிரண்டும் அக்கதைகளைப் படைத்தவர்களின் சமூக அமைப்பின் தன்மைகளைக் காட்டுகின்றன. ஒன்று தாய் வழி உரிமைச் சமுதாயம்; மற்றொன்று தந்தை வழி உரிமைச் சமுதாயம். பம்பாக் கதை தாய்வழி உரிமையை எதிர்த்து தந்தை வழி உரிமை முளைவிடுகிற நிலையில் தோன்றியதாக இருக்கவேண்டும். பெண் படைக்கப்பட்டது கதையில் இல்லை. மூன்று குமாரர்கள்தான் பம்பாவின் படைப்புத் தொழிலுக்கு உதவினர். எனவே இக்கதை ஆண் ஆதிக்கச் சமுதாயத்தின் படைப்பாகவே இருத்தல் வேண்டும். - ஜீவராசிகளை வகைப்படுத்தும் முறையும் குழந்தைத்தனமாக இருப்பதைக் காணலாம். ஜீவராசிகளுள், ட்லேட்ஸே மட்டும் பிறவற்றிற்கு நோயுண்டாக்கக் கூடியதாயுள்ளது. அதனை பம்பா விண்ணிற்கு அனுப்பிவிட்டார். giğin uemLûutref (anthromoporphic) nm efL வடிவமுடையவனாக இருக்கிறான். பெண்ணோடு சேர்ந்து அவன் மக்களைப் பெறவில்லை. பெண்ணின் பாத்திரம் இச்சமுதாயத்தில் அதிகம் உணரப்படவில்லை. எனவே அவர்களுடைய உணர்விற்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ப ஒரு படைப்பாளியைக் கற்பனையில்