பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5s. EFFis?fis WET • • • • • • • • • • • • • • • - . . . . . . . . . . . தாய்த்தெய்வம் பண்பு மாற்றம் பெற்று, வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்ததை குறிப்பிடலாம். இக்கதையில் உலோக காலத்தின் தோற்றம் இரண்டு வகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று தாய்த் தெய்வம், சாம்பல் நிற எஃகைப் படைத்து, அதில் ஒர் அரிவாள் செய்து குரோனலிடம் கொடுத்தாள். அவ்வாறானால் இக்கதை அரிவாள் தோன்றிய பின்னர் தோன்றியதாக இருக்க வேண்டும். அரிவாள் பயிரை அறுவடை செய்யப் பயன்படும் கருவி. அவ்வாறாயின் இப்புனைகதையைப்படைத்த மக்கள் ஆரம்பகால விவசாயத்தை அறிந்திருந்தனர். மாட்டைப் பழக்கவோ கலப்பை விவசாயம் செய்யவோ அறிந்திருந்ததில்லை. விவசாயம் பெண்களது படைப்பு என்பது சமூக மானிடவியலார் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு கருத்து. கதையும் தாயுரிமைச் சமுதாயத்தில் இரும்பு அரிவாள் பயன்பட்டதைக் கூறுகிறது. ஆனால் அரிவாள் அறுவடை செய்யப் பயன்படுத்தப்படவில்லை. தந்தையின் படைப்பு உறுப்பை அறுத்தெறியப் பயன்படுத்தப்பட்டது. இது உயர்வு நவிற்சியாக, பல இனக் குழுக்களுக்கும் விரோதமாகிவிட்ட தந்தையாதிக்கத்தை அழிக்கும் முயற்சியைக் குறிப்பிடுகிறது. நாம் இங்கு சொன்ன கதையில் 3, 4 பாகங்கள் இதனைத் தெளிவுபடுத்தும். அதனையும் சுருக்கமாகவேனும் கூறினால்தான் இப்புனைகதை பற்றிய சமூக மானிடயில் விளக்கம் முழுமையடையும். மூன்றாவது பகுதியில் ஜீயுஸ் தனது தந்தையால் விழுங்கப் படுவதினின்றும் தப்பித்துக் கொள்கிறான். ஜியுஸை தந்தை விழுங்கும் முயற்சி தந்தை - மகன் முரண்பாட்டையும், பகைமையையும் குறிக்கும். இதன் காரணத்தை முன்னரே குறிப்பிட்டோம். ஜியுஸ் தலைமையில் தேவர் ஒன்றுதிரண்டு அரக்கரோடு போராடி அவர்களை அழித்ததை நான்காம் பகுதி கூறும். அரக்கர்கள் தாயுரிமைச் சமுதாயத்தின் ஆண்கள் வளர்ச்சிபெற்ற தந்தையுரிமைச்சமுதாயத்தின் ஆண்கள் தான் தேவர்களெனக் கருதப்படுகிறார்கள். எனவே முடிவில் தந்தையுரிமை நிலை நாட்டப்படுகிறது. இதற்குரிய சமூக உற்பத்தி நிலை தோன்றியவுடன் சமூக உறவுகள்