பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக 70. . . . . . . . . 影 将 成 * 8 ※ 哈 ° பழங்கதைகளும் பழமொழிகளும் 3. முதலில் இருளில் போர்த்த இருள்தான் இருந்தது. நீரின் மீது இருள்தான் மூடியிருந்தது. எதனாலும் மூடப்படாத ஒன்றே ஒன்றுதான் இருந்தது. வெப்பத்தின் சக்தியால் அது பிறந்தது. 4. ஆரம்பத்தில் ஆசை அதன்மீது இறங்கியது. மேலும், கீழும் என்ன இருக்கிறது என்பதை அறிந்தது. தம் இதயம் அறிந்த ஞானிகள் யார் உறவு, யார் இல்லை என்பதையறிந்தார்கள். 5. வெட்ட வெளியில் நூலை விட்டெறிந்து மேலே என்ன இருக்கிறது. கீழே என்ன இருக்கிறது என்பதை அறிந்தார்கள். வீரியத்தின் சக்தி, மாபெரும் சக்திகளைக் கருக்கொள்ளச் செய்தது. மேலே வலிமை, கீழே இயல்பூக்கம். 6. இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? படைப்பு எவ்வாறு நிகழ்ந்தன? தேவர்கள் படைப்புக்குப் பின்னர்தான் தோன்றினர். எனவே இது எப்பொழுது தோன்றிற்று என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் தோற்றம் கொண்டபின் அவன் இவற்றையெல்லாம் படைத்தானா? அல்லது இல்லையா? உயர்ந்த வானோர் உலகிலிருந்து இதையெல்லாம் காண்பவன் அவனுக்கே தெரியும் அல்லது அவனுக்கே தெரியாமல் இருக்கலாம். இப்பாடலில் சந்தேக வாதம் (Agnosticism) காணப்படுகிறது. முதன் முதலில் தோன்றியது இருள். உலகம் ஒன்றாயிருந்தது, பிறகு பிரிவுகள் தோன்றின. இது எப்படி, கடவுள் படைத்தாரா இல்லையா அவருக்கே அது தெரியுமா? என்று கவிஞர் சந்தேகப்படுகிறார். ஒருமையான சூன்யத்திலிருந்தும் இருளில் இருந்தும் இவ்வுலகம்