பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఃఖీ 72 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் গুঞ্জ தன்னிலிருந்தே நான் என்ற சுய உணர்வையும், மனத்தையும் படைத்தான். இதுவே பிரபுத்துவம் வாய்ந்தது. பின்னர் ஆன்மாவையும், மூன்று குணங்களால் பாதிக்கப்படுகின்ற எல்லாப் படைப்புகளையும், ஐந்து புலன் உறுப்புகளையும் படைத்தான். எல்லையற்ற ஆற்றல் கொண்ட ஆறு மூலப்பொருள்களின் துகள்களை இணைத்து எல்லாஉயிர்களையும் படைத்தான். முதற்பகுதியில் சாங்கிய தத்துவத்தின் கூறுகள் காணப்படுகின்றன. தாமசகுணம் இயக்கத்திற்குத் தடையான நிலைத்தல் தன்மையைக் குறிப்பிடும். அதுவே முதலில் மேலிட்டு இருந்தது. நான் என்ற சுயஉணர்வு பிரம்மன் என்று அழைக்கப்பட்டது. இது உயிர்கள் தோன்று முன்னரே இருந்தது. சாங்கியத்தின் பரிணாம விளைவுப் பொருள்கள் இருபத்தினான்கும், ஆறு பொருள்களாகச் சுருக்கப்பட்டுள்ளது. சாங்கியத்தில் புருஷன் என்பது செயலற்றதும் சாட்சி, யமானதுமாக வருணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கதையில் படைப் புச் செயலின் ஆதிகாரணமாகக் கூறப்படுகிறது. சாங்கிய தத்துவம் உபநிஷத காலத்திற்கும் முந்திய கருத்து. இக்கதையில் ஆணாதிக்க சமுதாயத்தின் கருத்துக் காணப்படுகிறது. பிரபஞ்சத்தைச் சிந்தையால் பிரம்மம் படைத்த்து. அதே சமயம் பிரம்மம் ஒரு வருஷம் முட்டையினுள் இருந்தது. நீரைப் படைத்தது பிரம்மம். நீரை வாழ்விடமாகக் கொண்ட நாராயணன் உலகையும் உயிர்களையும் படைத்தான். பிற்காலத்தில் புராணங்களில் முக்கியத்துவம் அடைந்த பிரம்மாவிற்கு இக்கதையில் இடம் இல்லை என்பது கவனத்துக்குரியது. சிவனுக்கும் இடம் இல்லை. பிரம்மம் செயல்படும் சக்தியாக இக்கதையில் கூறப்படுகிறது, பிற்காலத்தில் உபநிஷதங்களிலேயே குணமற்றதும் செயலற்றதுமாக வருணிக்கப்படும் பிரம்மம் இங்கு படைப்பின் மூலகாரணமாக வருணிக்கப்படுகிறது. சாங்கியத்தின் ஜடகாரணப்பரிணாமம் இக்கதையில் ஈசுவர காரணப்பரிணாமமாக மாற்றப்பட்டது. அதாவது பொருள் காரணமாக ஏற்படும் பரிணாமம் கடவுள் காரணமாக ஏற்படும் பரிண்மமாகக் கருத்து மாற்றப்பட்டது.