பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vịị இதுவரை இருந்ததில்லை, வரலாறு என்பது செல்வர், வறியர், புேலோர், கீழோர், ஆண்டான், அடிமை இடையே நிகழ்ந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறே. வருங்காலத்தில்தான் ஏற்றத்தாழ்வற்ற பொற்காலத்தை இனிமனித சமுதாயம் சென்றடைய முடியும் என்று அறுதியிட்டுச்சொல்லுவதுமார்க்சியம். இதனையொட்டித் தமிழகத்தில் சமுதாய மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைப் பேராசிரியர் நா. வானமாமலை பல கட்டுரைகளில், நூல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார். இத்தொகுப்பில் இரண்டாம் பகுதியாக அமைவது சமுகவியல். இதில் முதல் கட்டுரை தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் நிலவுடைமை, செல்வம் பற்றியும் அதன் வழிவந்த வருவாய் பற்றியும் ஆகும். முதன் முதலில் தமிழகத்தில் மத்தியகால நிலவுடைமை ஆதிக்கம் பற்றி, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே. கே. பிள்ளை, டி. வி. மகாலிங்கம் ஆகிய அறிஞர்களுக்குப் பின்னர் தொடர்ந்து இடைக்காலச் சோழர் ஆட்சியில் நிலவுடைமை பற்றி ஆய்வு செய்தவர் பேராசிரியர் நா. வானமாமலை. பின்வந்த ஆய்வாளர் பலர். ஜப்பான் நாட்டைச் சார்ந்த பேராசிரியர் கராஷிமா நா. வா. இதே பொருள் பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ள சில கட்டுரைகளில் கண்ட சில முடிவுகள் Logo #Us. STégoujśirassif only oLiu South Indian History and Society, studies from inscriptions 850 - 1800 storgli ETsälä. ஆதாரங்கள் மாறுபடும்போது முடிவுகளும் இயல்பாகவே மாறும். ஆய்வுப் பரப்பு பெரிய காலவெளியைத் தழுவியது. எனவே கருத்துவேற்றுமை இருக்கும். இது வளர்ச்சிக்கான அறிகுறி. இது வரவேற்றுப் பாராட்டத்தக்கது. இருப்பினும் பேராசிரியர் நா. வானமாமலையின் பங்களிப்புக்கு இதனால் ஊறு ஏதும் நேர்ந்திடாது. ஆராய்ச்சி என்பது தொடர் நிகழ்ச்சி. தமிழகத்தைப் பொறுத்தவரை, 1968-1969 வரை தமிழ்க் கல்வெட்டுக்கள், தாமிர சாசனங்கள், அரேபிய, பர்சிய மொழிச் சாசனங்கள், கர்நாடக மும்பைகல்வெட்டுகள் நாணயங்கள் 51569 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2832 மட்டும் படித்தறியப்பட்டுப்பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பதனை நோக்கும்போது, அரசு, ஆய்வாளர்கள் முன்னுள்ள பணி எவ்வளவு பெரிது என்பது புலனாகும். திரிபுரி பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எடுத்துக்காட்டுவது இரண்டாவது கட்டுரை. மற்ற மொழிகளில் வழங்கும் பழமொழிகளைத் திரட்டி அவற்றுக்கு ஒப்பான தமிழ்ப் பழமொழிகளை