பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్స్లః . ஆது

  1. குறி பார்த்து எறிந்தும் கல் ஈட்டி, கல் கோடரிகளைப் பயன்படுத்தியும் விலங்குகளைக் கொன்றனர். இக்கால மக்கள், மந்திரம் மந்திரச் சடங்குகள், வனதேவதைகள், பேய்கள், அவற்றை அடக்கக் கூடிய வலிமையுடைய பல தெய்வங்களை நம்பினார்கள். குழு நடனங்களையும் தமது பயத்தைப் போக்கிக்கொள்ளப் பயன்படுத்திக்கொண்டனர்.

甄瞳。 鈺爾鱷爵鑫 •。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。。 தமிழ் நாட்டில் ஆர் - அரமகளிர் என்ற பயமூட்டும் பெண் தெய்வங்களை நம்பினர். வான்-அரமகளிர் என்றுவானத்தில் உலவும் பெண் தெய்வங்களையும் நம்பினர். பாவை என்ற உருவங்களில் அவற்றை வழிபட்டனர். கொல்லிப்பாவை என்ற தெய்வம் கண்டவரைக் கொன்று விடும் என்ற நம்பிக்கைகொண்டிருந்தனர். இவை தவிர பல்லாயிரம் பிசாசுகளும், பேய்களும் இறந்தவர் ஆவிகளும், தங்கள் வாழ்க்கையில் தலையிடுகின்றன என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவர்களுடைய வாழ்க்கைக்கு மழை தேவையாக இருந்ததால், மழையை மாரியென்ற தெய்வமாக வழிபட்டனர். மாரி பின்னர், தொத்து நோய்களை உண்டாக்கும் தெய்வமாக மாறிவிட்டது. வடநாட்டில் நூற்றுக்கணக்கான நோய்த் தெய்வங்களும் பாம்புத் தெய்வங்களும், இயற்கை சக்திகளும் வணங்கப்பட்டன. அவர்கள் மலை, வானம், காடு முதலிய இடங்களில் இயற்கைக்கு அதீதமான சக்திகள் இருக்கின்றனவென்று நம்பி அவற்றைப்பற்றி அச்சம்கொண்டிருந்தனர். அச்சத்தின் காரணமாகவே அவற்றை வழிபடவும் பலி கொடுத்து அவற்றைத் திருப்திப்படுத்தவும் முயன்றனர். அவர்களது தெய்வ வணக்கம் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கால்நடை வளர்ப்புக் காலத்தில் வாழ்க்கைத் தேவைகள் அதிகரித்தன. கால்நடைகளுக்குத் தேவையான, புற்பூண்டுகள், தழைகள் நீர் முதலியன கிடைக்கிற இடங்களைத் தங்கள் வாழ்விடங்களாகக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்பொழுதும் வானத்தை நம்பியே அவர்கள் வாழ்ந்தனர். மழையே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. எனவே மழைத்தெய்வம் அவர்களுடைய பிராதனத் தெய்வமாக இருந்தது. வருணனும் மித்ரனும் மாபெரும் தெய்வங்களாகப் போற்றப்பட்டன. ஆடு, மாடுகளை வனவிலங்குகளிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டியிருந்தது. அதனால் ஆடு மாடுகளைப் பாதுகாக்கும்