பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் பெண்ணாதிக்க சமுதாயத்தில் தாய்வழிதான் குறிப்பிடப்பட்டது. 'இவள் மகன் இவன் என்றுதான் ஆண்கள் அழைக்கப்பட்டனர். கால்நடை வளர்ப்புத் தோன்றி வளர்ச்சி பெற்றதும் இவன் மகன் இவன் என்று ஆண்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பைபிளில் குறிப்பிடப் படுபவர்கள் ஆண்வழி உரிமையிலேயே அழைக்கப்படுகிறார்கள் (இவன் மகன் இவன்). 1916-ல் மோஹன்ஜதரோ தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்னால் ஒரு ஆய்வாளர் எழுதினார்: ‘சர்வசக்தி வாய்ந்த தேவி என்ற கருத்தை வேதகால ஆசிரியர்களுடைய காலத்துக்கு முன்பு ஆசியாமைனர், சிரியா, எகிப்து முதலிய மத்திய தரைக் கடற்கரை நாடுகளில் காணலாம். இந்திய சாக்தேயர்களது தேவிகருத்தையொத்த கருத்துக்களையும் வழிபாட்டு முறைகளையும் சடங்காசாரங்களையும் அந்நாடுகளின் பண்டைய நாகரிகத்தில் காணலாம்.” அந்நாடுகளில் சக்திவழிபாட்டில் சடங்காசாரப்புனிதப்புணர்ச்சி வழக்காயிருந்தது. இதில் இருந்துதான் தந்திர வழிபாட்டுமுறை தோன்றியது. நம் நாட்டுத் தாய் தெய்வங்களைப் போன்ற இயல்புகளைக் கொண்ட, செமிடிக் நாடுகளைச் சேர்ந்த அஸ்டார்டே என்ற தெய்வமும், எகிப்திய தெய்வமாக 'ஐஸிஸ் என்ற தெய்வமும், பிரிஜிய நாட்டைச் சேர்ந்தஸ்ைபீல்' என்ற தெய்வமும் வணங்கப்பட்டுவந்தன. சாங்கிய தத்துவத்தில், “உலகில் வேறுபட்ட பல்வகையான உருக்கள் தோன்றுவதற்கு முன் வேற்றுமையற்ற ஒரே பொருள்தான் இருந்தது” என்ற அடிப்படையான பொருள் முதல்வாதக் கருத்து இருந்தது. இதனைப் பிரக்ருதி என்று தத்துவவாதிகள் அழைத்தனர். இது ஒரு தத்துவக் கருத்தாகத்தான் இருந்தது. ஆனால் புராண காலத்தில், இக்கருத்திற்குப் புறவடிவம் கொடுத்து, பிரக்ருதி என்ற மூலப்பொருளுக்குப் பெண்மையென்னும் இயல்பை ஏற்றி, அதற்கு உணர்வு என்னும் புருஷனையும் கற்பித்தார்கள். ஆனால் உணர்வு என்னும் புருஷன் தோன்று முன்னரே, பிரக்ருதி படைப்பதற்கு ஆசை கொண்டாள். ஜகன்மாதாவாக உருக்கொண்டு அவள் தனது உடலிலிருந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுளர்களையும்