பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105

அமைப்புக்களும் இதனுள் அடங்கும். வேசரம் 47 ஒரு சிற்பவகை என்பர்.

திராவிடம் - வடபால் கிருஷ்ணா நதிக்குத் தெற்கே கன்னியாகுமரிவரை அமைந்த கட்டடக்கலை. இதில் தமிழர், சாளுக்கியர், ஹொய்சாளர் முதலிய உட்பிரிவினரின் கட்டடக் கலைகள் எல்லாம் அடங்கக் கூடியவையாம். 48

தளிகள் அமைப்பு

பழந்தமிழர் கோயிற் கட்டடக் கலையில் ஆறு பெரும் உறுப்புக்கள் உண்டு. அவையாவன:

1. அடி (அதிஷ்டானம்) 2. உடல் (பாதம்) 8. தோள் (மஞ்சம்) 4. கழுத்து (கண்டம்) 5. தலை (பண்டிகை) 6. முடி (ஸ்தூபி)

ஆறுறுப்பின் அளவுகள்

1. அடி என்னும் அதிஷ்டானத்தின் உயரம் 1 பங்கு.
2. உடல் என்னும் பாதத்தின் உயரம் 2 பங்கு.
3. தோள் என்னும் மஞ்சத்தின் உயரம் 1 பங்கு.
4. கழுத்து என்னும் கண்டத்தின் உயரம் 1 பங்கு.
5. தலை என்னும் பண்டிகையின் உயரம் 2 பங்கு.
6. முடி என்னும் ஸ்தூபியின் உயரம் 1 பங்கு 49

விமானங்கள்

கோயிலின் மூலத்தானத்தில் கடவுள் அல்லது மூர்த்தம் அமைந்திருக்கும் இடத்திற் மேற்பகுதித் தூபிக்கு விமானம் என்று பெயர். நுழைவாயில் பகுதித் தூபிக்குக் கோபுரம் என்று பெயர்.

மூலத்தானம் அல்லது கருவறைக்குத் திருவுண்ணாழிகை என்று பெயர். 50 தமிழகத்திலேயே மிக உயரமான விமானம் கி.பி. 1000 ல் இராசராசன் எடுத்த தஞ்சைப் பெருவுடையார் விமானமாகும். இதன் உயரம்