பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

.

அப்பெயர்கள் வருமாறு:

  1. . விருத்தகிரியில் கேசவப் பெருமாள்
  2. . அவர் மகன் விசுவமுத்து -
  3. . திருப்பிறைக் கோடை ஆசாரி திருமருங்கன்
  4. . அவர் தம்பி காரணாச்சாரி 7

கோயில் கட்டடக் கலைஞர் ஸ்தபதி என்ற தனிப் பெயராலும், வீடு முதலிய கட்டடக் கலைஞர் கொத்தனார் என்ற பெயராலும் குறிக்கப்படும் வழக்கம் பின்னாளில் வந்தது.

ஸ்தபதிகள் ஆகமப் பயிற்சி, வடமொழி அறிவு, சிற்ப நூலறிவு அதிகமுள்ளவர்களாக உயர் மட்டத்தில் இருந்தனர்.

உருக்குதல், வார்த்தல், பஞ்சலோகக் கலவைஜடிபந்தன மருந்து செய்தல் (சிலையைப் பீடத்தோடு இணைக்கும் அரக்குப் போன்றதொரு மருந்து) முதலிய சிறப்பம்சங்கள் ஸ்தபதிகளுக்குத் தெரிந்திருந்தன. 8

காரை, செங்கல், பூச்சு, கட்டல் நெற்றி எடுத்தல் (மேல் விதானப் பூச்சு) ஆகிய வேலைகளில் கொத்தர் அல்லது கொத்தனார்கள் தேர்ந்திருந்தனர்.9

‘சிற்ப சாஸ்திர’ நூல் மரபுப்படி எல்லாரையும் “சிற்பிகள் எனக் குறித்த பழைய மரபு மாறி வெறும் கட்டட வேலை மட்டும் செய்வோர் கட்டட வேலைக்காரர் அல்லது கொத்தனார் என்ற பிற்கால வேறுபாடுகள் வந்தன. இந்த வேறுபாடு வந்த பின்னும் கோயில் கட்டட வேலைகளில் ஸ்தபதி கொத்தனார் இருவருக்குமே பணிகள் இருந்தன.

சுவரைக் கொத்தனார் எடுத்தார். திருவுண்ணாழிகை, பீடம் அமைத்தல், பீடத்தில் மூர்த்தத்தை நிறுவுவது போன்றவற்றை ஸ்தபதி செய்தார். 10