பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

129


ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கு 4

என்று சிலப்பதிகாரம் அரங்கு கட்டப்பட்ட விதத்தை விவரிக்கிறது. இதில் எண்ணிய நூலோர், என்ற தொடருக்கு அடியார்க்கு நல்லார் விளக்கம் எழுதும் போது, - -

“எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கு செய்தற்கு நிலக் குற்றங்கள் நீங்கின இடத்திலே நிலம் வகுத்துக் கொண் டென்க17 என்றார்.

மேலும் எண்ணப்பட்ட மண்ணக நிலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் விளக்கமும் அவரது உரையி லேயே கிடைக்கிறது.

 தந்திரத் தரங்கிங் கியற்றுங்காலை
அறனழித் தியற்றா வழக்குடைத் தாகி
நிறைகுழிப் பூழி குழிநிறை வாற்றி
நாற்றமும் சுவையும் மதுரமுமாய்க் கனம்
தோற்றிய திண்மைச் சுவட துடைத்தாய்
என்பு உமி கூர்ங்கல் களிஉவர் ஈளை
துன்ப நீறு துகள் இவை இன்றி
ஊரகத் தாகி யுளைமான் பூண்ட
தேரகத்தோடுந் தெருவுமுக நோக்கிக்
கோடல் வேண்டும் ஆடரங்கதுவே. 18

என்று ஒரு மேற்கோளும் வருகிறது. ஏறக்குறைய மனை நூல் பாடல் போலவே ஒரு பாடலை உரையாசிரியம் காட்டுகிறார். -

தனியார் வீட்டுக்குத் தெருக் குத்தல் (தெருவை முக நோக்கி இருப்பது) ஆகாது எனக் கூறும் அதே சாஸ்திரம்’ அரங்குக்குத் தெருமுக நோக்கி இருத்தல் வேண்டும் என்று இலக்கணம் கூறியிருப்பது சிந்தனைக்குரியது. இதே பகுதிக்கு அரும்பதவுரையில் “எண்ணப்பட்ட நாடக நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கு