பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், இவற் றினைச் சூழ்ந்த புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டி யும் முதலாயின கொள்க. 45

இதனுள் கண்ணுளர் குடிஞைப்பள்ளி என்பது கலைஞர் புனைவறையாக இருத்தல் வேண்டும் என்று உய்த்துணர முடிகிறது.

கரந்து போக்கிடன் என்பது அப்பள்ளியிடத்துக்கும் அப்பள்ளியிலிருந்தும் அவையினர் காணாதபடி போகவும்: வரவும் அமைந்த வழியாயிருத்தல் வேண்டும். அல்லது கருவியிசை ஓர் அமரஇக்கால அரங்கில் கட்டப்படும் பள்ள, மான அமர்வறை போன்ற ஒன்றாக இருத்தலும் கூடும். என்று கருதலாம். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலைக்களஞ்சிய நூல் கட்டடங்களின் பயனை வகைப்படுத்தும்போது கேளிக்கைகளுக்கான மனமகிழ் கட்டடங்கள் (Recreational Architecture) என்று ஒரு வகையைக் கூறுகிறது. 46

கட்டடங்களை அலங்கரிப்பதைப் (Ornamental): பற்றியும் கூறுகிறது. சிலப்பதிகார அரங்கேற்றுகாதையில் வருகிற அரங்க நிருமாணப் பகுதி மனமகிழ்ச்சிக்கான கட்டடக் கலைப்பகுதிக்கும் அதன் உள்ளலங்காரத் திறனுக்கும் (Applied Ornamental) பொருத்தமான எடுத்துக்காட்டாக அமையக்கூடியது.

(அ) மரபு, (ஆ) கலை நுணுக்கம், (இ) பொருத்தம் ஆகிய மூன்றினாலும் இச்சிறப்பு அரங்கேற்று காதைப் பகுதியிலிருந்து அறியும் அரங்க நிருமாணக் கலையில் இசைந்து சிறக்கின்றன. நிலங்கோடலில் பழைய மரபும், எழினி, தனித்தனி வாயில்கள், தூண்களில் நிழல் படாத மேடை, அவை ஆகியவற்றில் கலை துணுக்கமும் காணக் கிடக்கின்றன. - . . -