பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


சில நகரமைப்பு முறைகள் பற்றியும் கூட அறிஞர் எஸ். வி. சுப்பிரமணியம் தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"பரிபாடல் மதுரை நகர் தாமரை வடிவில் அமைந்திருந்ததாகக் கூறுகிறது. உள்ளே யானைகள் நுழையுமளவு பெரிய புதைகுழாய்களைப் பூமிக்கடியில் பதித்திருந்தமையைச் சிலம்பு செப்புகிறது. அது பாதாள வடிநீர் வழியாகப் (Under ground drainage) பயன்பட்டது எனத் தெரிகிறது.4

அவ்வாறு யானை புகுந்து புறப்படத்தக்க பெரிய பெரிய பாதாள வழிச் சாக்கரைகள் இன்றும் பம்பாய் போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இவ்வாறு பழந்தமிழர் நகரமைப்புத் திறன் பற்றிப் பலரும் கூறியுள்ளனர்.

மயமதத்தின் ஒரு பிரிவான சிற்பநூலே நகரமைப்புப் பற்றியும் விவரிப்பதாக வை. கணபதி அவர்கள் கருதுகிறார்கள்.5

சிலப்பதிகாரத்தில் பூம்புகார் நகர நிருமாணமே ‘மய மதம்’ என்னும் சிற்பநூல் இலக்கணப்படி அமைந்ததாகக் கூறப்படுகிறது.6

சிலம்பில் கோவலனும் கண்ணகியும் தங்கியிருந்த மாளிகையிலே அவர்களது கட்டில் வருணிக்கப்படுகையில் “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை” 7என்கிறார் இளங்கோவடிகள். ஆகவே கட்டடக் கலைக்கு மட்டுமின்றி நகரமைப்புக் கலைக்கும் மயமதமே ஆதார நூல் ஆகிறது. மயன், பாண்டவர்க்கு நகரமைத்துக் கொடுத்த விவரம் பாரதக் கதையில் வருவதை யாவரும் அறிவர். மயன் சமைத்த நகரையும், மண்டபங்களையும் கண்டு, ஒரு கையின் ஐந்து விரல்களையும் விரித்து எண்ணத் தொடங்