பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



வெள்ளிடை மன்றம்

பல பொருள்கள் திணிக்கப்பட்ட மூட்டைகள் இருந்தன. அவற்றின் மேல் அவற்றுக்கு உரியவர் தம் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

அந்தந்த மூட்டைக்கு உரியவர் தத்தமது மூட்டைகளை அடையாளம் பார்த்து எடுத்துச் செல்வர்.

எவனாவது, கள்வனைப் போல், பிறர்க்குரிய மூட்டையைக் கவர்வானேயாகில், அவன் அதனை எங்குமே கொண்டு செல்ல முடியாது. கண்டுபிடிக்கப்பட்டுச் செய்த தவற்றுக்கு உரிய முறையில் அவன் தண்டிக்கப்படுவான். வெள்ளிடை மன்றத்தில் எந்தப் பொருளும் திருடு போக முடியாது.

வெள்ளிடை மன்றம் என்ற பெயரை நினைத்த மாத்திரத்தில் கள்வர் நடுங்குவர். பொருளைக் களவு செய்வோரிடமிருந்து பாதுகாக்கக் கூடியதும், மீறிக் களவு செய்வோரைக் கடுமையாகத் தண்டித்து அவமானப்படுத்துவதுமான இடம் வெள்ளிடை மன்றமாக இருந்தது.22

இலஞ்சி மன்றம்

ஒரு பொய்கையாகும். கூன், குருடு, ஊமை, செவிடு, தொழு நோயர் ஆகியோர் அப்பொய்கையில் மூழ்கி வலம் வந்தால் குறைகள் நீங்கி நலமடைவர் என்று கூறப்பட்டுள்ளது.23

நெடுங்கல் நின்ற மன்றம்

இந்த மண்டபத்தில் ஒளி வீசும் நெடிய கல் நடப்பட்டிருந்தது. வஞ்சக எண்ணம் கொண்டவர்களால் மருந்து வைக்கப்பட்டுப் பித்தம் கொண்டவர்கள், நஞ்சுண்டு, அல்லது நஞ்சூட்டப்பட்டுத் துன்புறுபவர்கள், பாம்புக் கடிபட்டோர், பேய் பிடித்துத் துன்பப்படுவோர் ஆகிய