பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

187



சோமசுந்தரக் கடவுள் திருவருளால் மதுரை நகரம் காக்கப்பட்டது. பின்பு வருணனும் தன் அழுக்காறு தவிர்த்து செய்த தவற்றிற்கு நாணி இறைவனை வணங்கி, மன்னிப்பு வேண்டினான் என்பது திருவிளையாடற் புராணச் செய்தி.

இப்படி இறைவன் வருணனை எதிர்த்து ஏவிய நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாய்க் கூடிய பெருமையால் மதுரை நகருக்கு நான்மாடக் கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.15

ஆலவாய்

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களில் ஒருவனான வங்கிய சேகர பாண்டியன் என்பவனின் காலத்தில் மக்கள் தொகை பெருகியது. அதனால் அவன் மதுரை நகரத்தை விரிவுபடுத்த முயன்றான்.16

சிவபெருமானிடம் போய்த் தன் முன்னோர் வரையறுத்த பழைய நகர எல்லையைத் தனக்கு உணர்த்தும்படி சோமசுந்தரக் கடவுளை அப்பாண்டிய மன்னன் வேண்டினான்.17

அவன் வேண்டுதலுக்கு இணங்கிய சிவபெருமான் அவன் முன்னிலையில் ஒரு சித்தராகத் தோன்றினார். அச்சித்தரின் அரைஞாண், பூணுால், குண்டலம், கால் சதங்கை, கைவளை என்பன பாம்புகளாகவே காணப்பட்டன.

சித்தர் தம் கையிலிருந்த பாம்பைப் பார்த்துப் பாண்டிய நாட்டின் எல்லையையும், மதுரை நகரத்தையும் அரசனுக்கு வரையறுத்துக் காட்டுமாறு கட்டளையிட்டார்.

இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்று முன், அப்பாம்பு தன்னால் எல்லை காட்டப்படுகிற அந்தப் பெரு